ஸ்டார்ட் மியூசிக்.. ’பழனிச்சாமி வாத்தியார்’ ஆக களமிறங்கும் கவுண்டமணி.. பூஜை போட்டாச்சு!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்க போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்டுள்ளது.

83 வயதை கடந்த நடிகர் கவுண்டமணி 'பழனிச்சாமி வாத்தியார்' எனும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதன் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அதில் கவுண்டமணி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மீரா மிதுனை வைத்து பேயைக் காணோம் படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இந்த படத்தை இயக்குகிறார்.

காமெடி லெஜண்ட்

காமெடி லெஜண்ட்

நாகேஷின் சர்வ சுந்தரம் படத்தில் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்த கவுண்டமணி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 80 மற்றும் 90 களில் மிகச்சிறந்த காமெடி லெஜண்டாகவே மாறினார். கவுண்டமணி செந்தில் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்த நிலையில், மீண்டும் ஹீரோவாக கவுண்டமணி நடிக்க உள்ளார்.

சில ஆண்டுகள் ஓய்வு

சில ஆண்டுகள் ஓய்வு

காமெடியனாக நடிப்பதை விட்டு ஓய்வு எடுத்து வந்த கவுண்டமணி சில ஆண்டுகளுக்கு முன்னர் 49 ஓ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகாத நிலையில், மீண்டும் குடும்பத்துடன் ஜாலியாக ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கவுண்டமணியை மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் நடிக்க களமிறங்கி விட்டார் கவுண்டமணி.

பழனிச்சாமி வாத்தியார் பட பூஜை

பழனிச்சாமி வாத்தியார் பட பூஜை

மீரா மிதுனை வைத்து பேயைக் காணோம் படத்தை இயக்கிய இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்க உள்ள பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பான முறையில் போடப்பட்டது. நடிகர் கவுண்டமணி அதில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

யோகி பாபு

யோகி பாபு


இந்த படத்தில் கவுண்டமணி உடன் இணைந்து காமெடியில் கலக்க யோகி பாபு மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இசையமைப்பாளர் கே இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். மேலும், படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 தயாரிப்பாளர்கள்

11 தயாரிப்பாளர்கள்

ராதாரவி, சித்ராலட்சுமணன், ஆர்.கே. சுரேஷ், மங்கை அரிராஜன், மதுரை டாக்டர் சரவணன், ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார் ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும், முன்னணி நடிகர் ஒருவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கேமியோ

சிவகார்த்திகேயன் கேமியோ

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் கவுண்டமணி நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. மீண்டும் கவுண்டமணி நடிக்க வந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்டார்ட் மியூசிக்.. ஐஎம் வெரி வெரி ஹாப்பி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X