காந்தக் கண்ணழகி ஸ்டார்ட் மியூசிக்... கவுண்டமணியின் 49-ஓ ஷூட்டிங் ஆரம்பம்
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்துள்ள கவுண்டமணி நாயகனாக நடிக்கும் '49-ஓ' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
நேற்று முன்தினம் தொடங்கிய இப்படத்தின் இயக்குநர் ஆரோக்கிய தாஸ். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
முதல்கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டது.

சாந்தனு படம்...
உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

49-ஓ....
அதைத்தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ'. 49-ஓ' (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயி...
‘49-ஓ' படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாகவும், அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்குமாம்.

முதற்கட்ட படப்பிடிப்பு....
முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே குன்றத்தூரில் ஆரம்பமாகி பொங்கல் வரை நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











