வழுக்கைத் தலையுடன் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி..வைரலாகும் பழைய போட்டோ!

சென்னை: நகைச்சுவை ஜாம்பவான் என்றால் அது நம்ம கவுண்டமணிதான். இவரது நகைச்சுவையையும் டைமிங் சென்ஸ் காமெடியும், பாடி லெக்வேஸ்யையும் அடித்துக்கொள்ள இன்று வரை ஆள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவரது பஞ்ச் வசனங்களை இளைய தலைமுறையினர் இன்று பேசித்தான் வருகின்றன.

செந்தில், கவுண்டனி ஜோடி என்றாலே அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று இவர்களது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். அதே போல சத்தியராஜ் மற்றும் கவுண்டமணி காம்பினேஷனில் பல படங்கள் ஹிட்டடித்தன.

கிடைத்த வேடத்தில் நடித்தார்

கிடைத்த வேடத்தில் நடித்தார்

நடிக்க வேண்டும் என்ற ஆசையால் கொங்கு தேசத்தை விட்டு சென்னை வந்து கிடைத்த சின்னச்சின்ன வேடங்களில் நடித்து பின்னர் சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்தார் சிவாஜியின் ராமன் எத்தனை ராமனடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பத்தவச்சிட்டியே பரட்டை

பத்தவச்சிட்டியே பரட்டை

16 வயதினிலே திரைப்படம் இவரது நடிப்பு ஆசைக்கு தீணிப்போடும் படமாக அடைந்தது. அந்த படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவாக மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பார். இவருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த டைலாக் பத்தவச்சிட்டியே பரட்டை இவரை அடுத்த எல்லைக்கு கொண்டு சென்றது.

இன்று வரை டிரெண்டிங்

இன்று வரை டிரெண்டிங்

கரகாட்டக்காரன் படத்தில் வரும் சொப்பனசுந்தரி காமெடியும், வாழைப்பழக் காமெடிக்காட்சியும் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. சூரியல் படத்தில் வரும் சூரியனை சுட்டது யாரு... சூரியனை யாரும் சுட முடியாதுப்பா என்ற வசனும், அரசியல்ல இதுஎல்லாம் சாதாரணப்பா, ஏய் இங்க பூசு.... பேக்குல பூசு போன்ற பஞ்ச் டைலாக் இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

அதே போல சத்தியராஜ் கவுண்டமணி ஜோடிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் வெற்றி பெற்றன. தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கவுண்டமணி மற்றும் சத்தியராஜ் மனைவி மற்றும் சத்தியராஜ் மகன் சிபிராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா சத்தியராஜ் ஆகியோர் அமர்ந்து இருக்கிறார்கள் இந்த பழைய புகைப்படம் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X