நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...: கவுண்டமணி ராக்ஸ் #HBDGoundamani

By Siva

Recommended Video

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது-வீடியோ

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

காமெடி நடிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் கவுண்டமணியின் இடத்தை பிடிக்க முடியாது. அவர் இடம் அவருக்கு மட்டுமே. அத்தகைய கவுண்டமணி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அரசியல்

அரசியல்

அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி பேசிய வசனத்தை வைத்து தற்போதைய அரசியல் சூழலை கலாய்க்கிறார்கள். அவர் திரையுலகில் இருந்து தள்ளியிருந்தாலும் அவரது வசனங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

மீம்ஸ்

மீம்ஸ்

அந்த கிரீஸ் டப்பாவ எப்படி எட்டி ஒதச்ச என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்ட கேள்வி கடந்த மாதம் மிகவும் பிரபலமானது. கிரீஸ் டப்பா காட்சி புகைப்படத்தில் செந்திலுக்கு பதிலாக ஒரு பெரிய தலைவரின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் போட்டார்கள். எவ்வளவோ காமெடி வசனங்கள் வந்தபோதிலும் கவுண்டமணியின் வசனங்களை அடித்துக் கொள்ள முடியாது.

பணம்

பணம்

"ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?" என்று கவுண்டமணி பேசிய வசனம் கருப்பு பண பிரச்சனைக்கு எப்படி நச்சுன்னு பொருந்துகிறது பாருங்க.

தொழில் அதிபர்கள்

தொழில் அதிபர்கள்

நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா...என்கிற கவுண்டமணியின் வசனம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

டேய் தகப்பா, பத்த வச்சிட்டியே பரட்டை வசனங்களை கவுண்டமணி என்றோ பேசியிருந்தாலும் இந்த தலைமுறையினருக்கும் அவை பரிட்சயமான வசனங்களாகும்.

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி

ஹய்யோ, ஹய்யோ. கவுண்டரு ஒரு தீர்க்கதரிசிங்க. இந்த வசனத்தை படித்து பாருங்க புரியும். நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...

சிவாஜி

சிவாஜி

மனது சரியில்லை என்றால் கவுண்டரின் காமெடி காட்சிகளை பார்த்தால் நிச்சயம் சிரித்துவிடுவோம். சிவாஜி கணேசனே மனது சரியில்லாதபோது கவுண்டமணியின் காமெடி காட்சிகளை காண்பிக்குமாறு கேட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X