ரஜினியால் சிரிப்பை அடக்கவே முடியல… மன்னன் படம் குறித்து ட்விட் போட்ட "கவுண்டமணி"!
சென்னை: நகைச்சுவை ஜாம்பவான் என்றால் அது கவுண்டமணிதான். இவரது நகைச்சுவையையும் டைமிங் சென்ஸ் காமெடியும், பாடி லேங்வேஜ்ஜையும் அடித்துக்கொள்ள இன்று வரை ஆள் இல்லை.
இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவரது பஞ்ச் வசனங்களை இளைய தலைமுறையினர் இன்றும் பேசித்தான் வருகின்றன.
தற்போது இவர் மன்னன் படத்தில் நடித்த அனுபவத்தை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகராக ஆசை
நடிகராக வேண்டும் என்ற ஆசையால் கொங்கு தேசத்தை விட்டு சென்னை வந்து கிடைத்த சின்னச்சின்ன வேடங்களில் நடித்து பின்னர் சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்தார் கவுண்டமணி. சிவாஜியின் ராமன் எத்தனை ராமனடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரஜினியின் நண்பராக
16 வயதினிலே திரைப்படத்தில் இவர் ரஜினியின் நண்பர்களில் ஒருவாக மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பார்.அதன் பிறகு ரஜினி, கமல், விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நிச்சயம் இடம் பெற்று இருப்பார்.

எடுபடவில்லை
ஒரு சில திரைப்படங்களில் இவர். ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இருப்பினும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு செந்திலுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து இருந்தார்.

மறக்க முடியாத படம்
சில நாட்களுக்கு முன்கூட செந்திலுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. தற்போது, மன்னன் படம், இது என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். பல காட்சிகளில் என் நகைச்சுவைகளுக்கு ரஜினியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ரஜினிகாந்திடமிருந்து பல நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த நல்ல மனிதனை என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று பகிர்ந்துள்ளார்.

வயிறே வலிச்சு போச்சு
உண்மையிலே மன்னன் திரைப்படத்தில் கவுண்டமணி, ரஜினி செய்த காமெடிகளை நிச்சயம் மறக்கவே முடியாது. இப்போ நினைச்சாக்கூட சிரிப்பை அடிக்கவே முடியாது. அதுவும் சின்னத்தம்பி படத்திற்கும் கிடைக்கும் பரிசை வாங்க இவர்கள் இருவரும் தியேட்டரில் செய்யும் கலாட்டாவும், கடைசியா, நாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லாமலே வந்துட்டீங்க என்று சொல்லும் காட்சியையும் பார்த்து பார்த்து சிரிச்சு வயிறே வலிச்சி போச்சு. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த நகைக்சுவை காட்சியை மறக்கவே முடியாது.


Click it and Unblock the Notifications











