For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா? பி.கே., வின் டாப் 5 பீட்!

  |
  மீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா? பி.கே., வின் டாப் 5 பீட்! - வீடியோ

  சென்னை: உங்களோட பிலிமி பீட்டின் பி.கே இன்றைய சுவாரஸ்யமான டாப் 5 பீட் சினிமா செய்திகளை கொண்டு வந்துள்ளார்.

  ஆஸ்கர் விருது விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த பாராசைட் திரைப்படம், நம்ம தளபதி விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சார கண்ணா படத்தின் காப்பி தானாம்.

  PK filmi beat video.. Video in Telegram.. embed video

  இதுவே அட்லி எடுத்த படத்தின் காட்சி ஹாலிவுட் படத்தில் வந்தால், அது காப்பி என்றும், கொரிய இயக்குநர் போங் ஜாங் ஹோ எடுத்தால், அது அவரே சுயமா சிந்திச்சு எழுதிய கதையின்னும் சொன்னா எப்படி பாஸ்!

  சரி அதை விடுங்க, அடுத்து நம்ம அக்கா அனுஷ்கா படத்துக்கு போவோம் வாங்க..

  அனுஷ்கா, மாதவன் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள நிசப்தம் படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  ஜனவரி 31ம் தேதி படம் வருமுன்னு பார்த்தா, படத்தை எந்த தியேட்டர்காரனும் வாங்க தயாரா இல்லையாம். ஹாலிவுட் வில்லனை எல்லாம் போட்டு எடுத்துருக்காங்க கொஞ்ச பார்த்து செஞ்சு விடுங்க..

  முக்கியமான ஸ்பெஷல் அப்டேட்டே இதுதான்.. எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்திற்கு பிறகு மீண்டும் நம்ம காமெடி லெஜண்ட் கவுண்டமணி சார் படம் நடிக்கப் போறாராம்.

  அதுவும் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா நடிப்பில் வெளியான ப. பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரணுக்கு பதிலாக நம்ம கவுண்டமணி தான் நடிக்கப் போறாராம்.

  ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த படத்தை இயக்கப் போவது நம்ம தனுஷ் இல்லை. அவருக்கு பதிலாக, திருடா திருடி, பொறி, சீடன் படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா தான் ப. பாண்டி 2 படத்தை டைரக்ட் பண்ணப் போறாராம்.

  நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது என கோர்ட் போட்ட உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால், குரல் கொடுத்துள்ளார்.

  நடிகர் சங்க விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி, இரு கோஷ்டிகளுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தல் நடத்தியே ஆகணும் என்றும், ஏற்கனவே நடத்திய தேர்தல் ரிசல்டை அறிவிக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் நம்ம பிகே தனது 4வது பீட்டில் தெரிவித்துள்ளார்.

  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல, 5வது பீட்டாக, ஆஸ்கர் விருது விழாவில், ஜோக்கர் படத்தில் நடித்ததற்காக நம்ம ஜோக்குயின் பீனிக்ஸுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும், விருது பெற்ற கையோட, உருக்கமாக அவர் பேசியது குறித்தும் விளக்கமாக பேசியிருக்கிறார் நம்ம பி.கே.

  முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள உடனடியாக வீடியோவை க்ளிக் செய்து செம்ம ஸ்வாகான பேச்சையும், சினிமா அப்டேட்களையும் தெரிஞ்சுக்கோங்க..

  English summary
  Goundamani will be come back with Dhanush movie, Oscar winner Parasite must be a copy of Vijay’s Minsara Kanna and son many more cinema updates on PK’s top 5 beat video.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X