திரைத் துளி
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணிக்கு கோவை மருத்துவமனையில் பித்தக் கல் அறுவைச் சிகிச்சை நடந்தது.
ரஜினி காந்த்தின் பாபா படப்பிடிப்பு தற்போது மைசூர் சுற்றுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் கவுண்டமணியும் கலந்து கொண்டுள்ளார்.இந்த நிலையில் அவருக்கு திடீர் என வயிற்று வலி வந்தது.
வலி தாங்க முடியாமல் துடித்த கவுண்டமணியை உடனடியாக காரில் ஏற்றி கோவைக்குக் கொண்டு வந்தனர். அங்குள்ள தனியார்மருத்துவமனையில் கவுண்டமணி அனுமதிக்கப்பட்டார்.
கவுண்டமணியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது பித்தப் பையில் கல் உருவாகியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவருக்குஉடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து கல் அகற்றப்பட்டது.
தற்போது அவர் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications