தளபதி 64 படத்தில் விஜய் உடன் நடிக்கும் கவுரி ஜி கிஷான்

Recommended Video

Thalapathy 64 Cast : தளபதி 64 படத்தில் குட்டி திரிஷா-வீடியோ

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் தளபதி 64 திரைப்படத்தில், புதிதாக கவுரி கிஷான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுரி கிஷான் 96 திரைப்படத்தில் இளவயது திரிஷாவாக நடித்துள்ளார். அந்த படத்தின் பள்ளி பருவ காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்திருந்தார். மேலும் தளபதி 64 படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படம் தீபாவளிக்கு வெளிவந்து மகக்ளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டை பெற்றார்.

Gouri G Kishan Acts in Thalapathy 64 Film

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அறிமுகமற்ற மனிதர்களுக்கு இடையில் நடக்கும் சந்திப்பும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், அதை அவர்கள் எப்படி தீர்த்தார்கள் என்று படத்தை நேர்மறையான திரைக்கதையில் உருவாக்கி இருப்பார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது கைதி படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகன், ஆண்டனி வர்கீஸ் போன்ற பல முக்கியமான நடிகர்கள் படத்திற்காக தேர்வாகி உள்ளனர்.

தளபதி 64 படம் இதுவரை வெளியான விஜய் படங்களில் இருந்து கட்டாயம் வேறுபட்டிருக்கும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த நேர் கானல்களில் கூறியுள்ளார். அதற்கு ஏற்றார்போல், இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார்.

தற்போது படத்தின் முதல் ஷெடியூல் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், படத்தின் சண்டை காட்சி ஒன்று மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கபட்ட போது வெளியான புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது

இதையடுத்து படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாவது ஷெட்டியூல் டெல்லியில் படமாக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் இந்த ஷெட்டியூலில், விஜய் சேதுபதி மற்றும் ஆண்டனி வர்கீஸ் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் 96 படம் மூலம் பிரபலமான கவுரி கிஷான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 96 படத்தில் சிறு வயது திரிஷாவாக கவுரி கிஷான் நடித்திருந்தார். அந்த படத்தின் பள்ளி பருவ காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்திருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X