மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா…வீட்டில் தனிமையில் ஓய்வு !

சென்னை : 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் யாரும் கவலைப்பட தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

குட்டி ஜானு

குட்டி ஜானு

96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் கௌரி கிஷான். இத்திரைப்படம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் இளம் வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன்.

குறும்படத்தில்

குறும்படத்தில்

இதையடுத்து மலையாளம் பக்கம் சென்ற கௌரி, மர்கம்களி திரைப்படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்தார். ஹாய் ஹாலோ காதலி என்ற படத்தில் நடித்தார். மறையாத கண்ணீர் இல்லை என்ற குறும்படத்தில் நடித்தார். மேலும் 96 தெலுங்கு ரீமேக்கிலும் ஜானு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜயுடன்

விஜயுடன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார். பொங்கலுக்கு வெளியானது இப்படத்தில் சவிதா என்ற கதாப்பாத்திரத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்திருந்தாலும், கல்லூரி பேராசிரியர் விஜய்யுடன் முக்கியக் காட்சியில் இடம் பெற்றிருந்தார் கெளரி. மேலும் தனுஷூடன் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார்.

ஓய்வில் இருக்கிறேன்

ஓய்வில் இருக்கிறேன்

இந்நிலையில், கௌரி கிஷான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எல்லோருக்கும் வணக்கம், எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் COVID - 19ல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த வாரம் முதல் நான் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், என்னைப்பற்றி கவலைப்படஒன்றுமில்லை, ஏனெனில் நான் எனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன். அதுவரை, நான் ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X