மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகை.. தனுஷுடன் நடிப்பது ஹேப்பி என ட்வீட்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் கெளரி கிஷன் இணைந்துள்ளார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது ஜானுவாக அறிமுகமானவர் கெளரி கிஷன்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது தனுஷை இயக்கி வரும் கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கெளரி கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜூனியர் ஜானு
கேரளாவில் பிறந்து சென்னையில் பள்ளி படிப்பை முடித்து, பெங்களூருவில் பட்டப்படிப்பை முடித்த கெளரி கிஷனுக்கு 24 வயதாகிறது. 96 படத்தில் ஜூனியர் ஜானுவாக நடித்து அசத்திய கெளரி கிஷன், தெலுங்கில் வரும் பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாகவுள்ள ஜானு படத்திலும் ஜூனியர் ஜானுவாக நடித்துள்ளார்.

மாஸ்டர் நடிகை
விஜய்சேதுபதியின் 96 படத்தில் நடித்த கெளரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ரம்யா, செளந்தர்யா, பிரேம், ஸ்ரீநாத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.
கர்ணன் படத்தில்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளரி கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கெளரி கிஷன் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அண்மையில், கையில் வாளுடன் பாறை மீது கம்பீரமாக நிற்கும் தனுஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில், கர்ணன் படத்தில் இணைந்துள்ள கெளரி கிஷனுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் படம்
இந்த ஆண்டு நடிகர் தனுஷுக்கு நடிப்பு வேட்டை தான். தமிழில் பொங்கலுக்கு பட்டாஸ் திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டி40 படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படமும், ராட்சசன் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படமும் இருக்கிறது. இதனிடையே பாலிவுட்டில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் நடிக்கவுள்ள அட்ராங்கி ரே படத்தின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலாகின.


Click it and Unblock the Notifications











