சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிரபல இயக்குநர்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரபல இயக்குநர் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கவுதம் வாசுதேவ் மேனன்.

மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.

வெற்றி படங்கள்

வெற்றி படங்கள்

தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

நடிகராகவும் வலம் வருகிறார்

நடிகராகவும் வலம் வருகிறார்

தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். கவுதம் மேனன் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லாக் அப், தீவிரம், கோடியில் ஒருவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்திலும் நடித்துள்ளார் கவுதம் மேனன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில்

முக்கிய கதாப்பாத்திரத்தில்

இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன், சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார் கவுதம் மேனன்.

காட்சிகளை நிறைவு செய்த கவுதம்

காட்சிகளை நிறைவு செய்த கவுதம்

டான் படத்தை இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கவுதம் மேனன் சமீபத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

என்ன நம்புங்க, நல்லா MUSIC பண்ணுவேன்னு சொன்னாரு | 99 Songs Movie Pressmeet| Filmibeat Tamil
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

இதனிடையே கவுதம் மேனன் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை கவுதம் மேனன் இயக்கும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X