சசிகுமாரிடம் வாய்ப்பு கேட்ட.. பிரபல இயக்குனர்!

சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல திரைப்பட விழா ஒன்றில் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சசிகுமாரிடம் வாய்ப்பு கேட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

அழகிய TV SISTERS |ANCHOR DHEEPTHI CHAT | FILMIBEAT TAMIL

சசிகுமாரும், கௌதம் வாசுதேவ் மேனனும் தனக்கான தனித்துவமான ஸ்டைலில் படங்களை இயக்கியும் நடித்தும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான திரை நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது ஜோஸ்வா இமைபோல் காக்க மற்றும் துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இணையதளத்தில் கௌதம் மேனன் சுப்ரமணியபுரம் திரைப்பட விழா ஒன்றில் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

மாஸ்டர்பீஸ் திரைப்படங்கள்

மாஸ்டர்பீஸ் திரைப்படங்கள்

தமிழ்சினிமாவில் மாஸ்டர்பீஸ் திரைப்படங்களாக கொண்டாடப்பட்டு வரும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார் முதன்முதலாக இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கிய இந்த திரைப்படம் 2008ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டு திரையில் வெற்றிகரமாக ஓடி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

சுப்ரமணியபுரம் திரைப்படம்

சுப்ரமணியபுரம் திரைப்படம்

நட்பு, காதல், துரோகம் என எல்லாம் கலந்து மதுரையின் மண் வாசனையுடன், எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு 1980களில் நடப்பது போன்ற மிக வித்தியாசமான முறையில் தத்ரூபமான காட்சியமைப்பில் உருவாக்கப்பட்ட சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், இத்திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால்

சுப்ரமணியபுரம் திரைப்பட விழா ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி மதுரையில் வந்து ஒரு திரைப்படம் எடுத்திருந்தால், எந்த அளவுக்கு மிக தத்ரூபமாக எடுத்து இருப்பாரோ அந்த அளவிற்கு சசிகுமார் தனது முதல் படத்திலேயே மிகச் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் எனவும் இந்த படத்தில் வரும் "கண்கள் இரண்டால்" பாடலின் இசையும், உருவாக்கப்பட்ட விதமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக அந்நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

வெளிப்படையாக வாய்ப்பு கேட்ட

வெளிப்படையாக வாய்ப்பு கேட்ட

இவ்வாறு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டு மாபெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வெளியீட்டு விழாவில், இயக்குனர் கௌதம் மேனன் கலந்துகொண்டு சுப்ரமணியபுரம் திரைப்படத்தை பற்றி அங்குலம் அங்குலமாக ரசித்துப் பேசியதோடு, சசிகுமார் இது போன்று மீண்டும் இன்னொரு படத்தை இயக்க இருந்தால் அந்தப் படத்தின் ஆங்கில திரைக்கதையை எழுதும் பணியை தனக்கு தருமாறு மேடையிலேயே வெளிப்படையாக வாய்ப்பு கேட்ட கௌதம் மேனனின் பெருந்தன்மையான இந்த செயல் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X