அஜீத்திடம் போய் நிற்கவேண்டிய அவசியம் எனக்கில்லை! - கவுதம் மேனன்

மழைவிட்டும் தூவானம் விடாத குறையாகத் தொடர்கிறது அஜீத்துக்கும் கவுதம் மேனனுக்குமான பிரச்சினை. தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன்தான் நான் பணியாற்ற முடியும்... அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்று முன்பு அறிக்கை விட்டு, அஜீத் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்ட கவுதம், இப்போது மீண்டும் ஒரு பத்திரிகைப் பேட்டி மூலம் அஜீத்தைச் சீண்டியுள்ளார்.
உங்களுக்கும் அஜீத்துக்கும் இடையில் என்னதான் நடக்குது. அஜீத்கிட்ட குழப்பமா... உங்களிடமா?, என்ற கேள்விக்கு பதிலளித்த கவுதம் மேனன்,
"10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடுறாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். முதலில் ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார்.
இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர்யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிடமும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டிருக்கார்.
இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச்சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை.." என்று கூறியுள்ளார்.
அப்ப குழப்பம் 'தல'கிட்டதானா?


Click it and Unblock the Notifications











