கவுதம் மேனன் தயாரிக்கும் அடுத்த பட ஹீரோ கவுதம் கார்த்திக்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' படம் பூஜை போட்டு பிறகு கைவிடப்பட்டது. இதையடுத்து அஜீத் 'வீரம்' படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் சிம்புவை வைத்து புதிய படமொன்றை இயக்க கவுதம் மேனன் முடிவு செய்து அந்த படத்தை கடந்த வாரம் தொடங்கி வேக வேகமாக இயக்கி வருகிறார். அஜீத் நடிக்கும் படத்தை பிப்ரவரி மாதம் தொடங்குகிறார்.
இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய படமொன்றை தயாரிக்கிறார் கவுதம் மேனன்.
இவர் தயாரிக்கும் அந்த படத்தை சிம்பு நடித்த 'போடா போடி' என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். படத்திற்கு 'நானும் ரவுடிதான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த படத்தை வரும் ஜனவரியில் தொடங்குகிறார்.
கவுதம் கார்த்திக் தற்போது 'சிப்பாய்', 'என்னமோ ஏதோ', 'வை ராஜா வை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











