அவன் யாருங்க எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறான்.. கடுப்பான கமல்.. கப்சிப் மோடுக்கு போன இயக்குநர்!

சென்னை: கமல்ஹாசன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே, சினிமாவின் அனைத்து துறைகளையும் கரைத்துக் குடித்தவராக உள்ளார். இன்றைக்கு சினிமாவில் புதிதாக என்ன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது, அந்த தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு என்ன படம் உருவாகி ரிலீஸ் ஆகியுள்ளது என்பது வரை தெரிந்து வைத்துள்ளார். அவருடன் பணியாற்றிய சினிமா துறையினர் அவர் குறித்து கூறும் விஷயம், அவர் ஒரு பல்கலைக் கழகம் என்பதுதான். அதேபோல், வெகு சிலர் மட்டுமே அவரது தலைக்கணம் குறித்தும் பேசியுள்ளார்கள். இப்படியான நிலையில், ஒரு படப்பிடிப்பின்போது, இயக்குநர் அவருக்கு ஒரு காட்சியை விளக்கும்போது, நடித்துக் காட்டியுள்ளார். இது கமல்ஹாசனை கோபப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இந்தியன் 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஷங்கரின் இயக்கத்தில், லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ரிலீஸ் ஆகி, படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக படத்தின் திரைக்கதையில் பல ஓட்டைகள் இருக்க, ரசிகர்கள் படத்தை ட்ரோல் செய்துவிட்டார்கள்.

Goutham Vasudev Menen Kamalhaasan Vettaiyaadu Vilayaadu Goutham Vasudev Menen Interview

இந்தப் படத்திற்கு இந்த அளவுக்கு மோசமான விமர்சனங்களை கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே எதிர்பார்க்கவில்லை. படத்தை ஓட வைக்க, கமல்ஹாசன், படக்குழுவினரோடு பல நாடுகளுக்குச் சென்று, புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனாலும் படம் எடுபடவில்லை. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், தக் லைஃப். இந்தப் படத்தினை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ளார். இதையடுத்து அன்பு - அறிவு ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், இந்தியன் 3 படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

Goutham Vasudev Menen Kamalhaasan Vettaiyaadu Vilayaadu Goutham Vasudev Menen Interview

கமல் கோபம்: ஒரு படப்பிடிப்பின்போது, இயக்குநர் அவருக்கு ஒரு காட்சியை விளக்கும்போது, நடித்துக் காட்டியுள்ளார். இது கமல்ஹாசனை கோபப்படுத்தியுள்ளது. அது எந்த படம், யாரு அந்த இயக்குநர், என்பது குறித்து பார்க்கலாம். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி, பெரும் வெற்றிப் படமாக மாறிய படம், வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் ரிலீஸின் போது செம ஹிட். சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோதும் செம ஹிட் தான். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்தார்.

Goutham Vasudev Menen Kamalhaasan Vettaiyaadu Vilayaadu Goutham Vasudev Menen Interview

ஜி.வி.எம்: இந்தப் படத்தின் படப்பிடின்போது, ஒரு காட்சியை விளக்கும்போது, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், உடல் அசைவுகளுடன் சொல்லி, விளக்கியுள்ளார். இது கமல்ஹாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கோபத்தை வேறு யாரிடமோ, " அவன் யாருங்க எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க?" எனக் கேட்டுள்ளார். இது, கௌதம் மேனன் காதுகளில் விழ, அதிலிருந்து கமலிடம் காட்சியை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டுள்ளார்.

Goutham Vasudev Menen Kamalhaasan Vettaiyaadu Vilayaadu Goutham Vasudev Menen Interview

லேடீஸ் பர்ஸ்: இது தொடர்பாக, அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேபோல், அந்தப் படத்தில் வரும் கண்ணு வேணும்னு கேட்டியாமே? எனும் காட்சியை, படமாக்கும்போது, கமல்ஹாசனேதான் தனது கண்களை விரித்துக் காட்டினார். அது எங்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. மேலும் அந்தக் காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது எனத் தெரிவித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டாமினிக் லேடீஸ் பர்ஸ் எனும் படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Goutham Vasudev Menen Kamalhaasan Vettaiyaadu Vilayaadu Goutham Vasudev Menen Interview

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X