ஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா?

By Staff

Recommended Video

ஒருவழியா ரிலீஸ் ஆனது | Enai Noki Paayum Thota- Official Trailer| Dhanush| Megha Akash| Review

சென்னை: தமிழ் சினிமாவை செம்ம ஸ்டைலியாக, கடல் கடந்த நாடுகளிலும் கொண்டாடும் லெவலுக்கு மாற்றி அமைத்தவர்களில் ஒருவர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்.

இந்த கருத்தில் யாருக்கும் மறுப்பே இருக்க முடியாது. ஆனால் அந்த மனிதரின் சமீப கால கஷ்டங்கள், செம்ம ஸ்டைலிஷான அவரது வாழ்க்கையை கடுமையாய் சேதாரம் செய்துள்ளன என்பதுதான் வருத்தமே!

மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா! என ஃப்ரீக்கி சப்ஜெக்டாக இருக்கட்டும், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு! என போலீஸ் ஸ்டோரியாக இருக்கட்டும், செம்ம ஃப்ரெஷ் அண்டு ஸ்டைலியாக கொடுக்க கவுதமை விட்டால் ஆளே இல்லை.

கமலே மெர்சல் ஆனார்

கமலே மெர்சல் ஆனார்

ஆனானப்பட்ட கமல்ஹாசனே, வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங்கில் மெர்சலாகிப் போனார். அந்தப் படத்தின் தரமான, தாறுமாறான வெற்றி அவரை ‘ம்ம்...வாய்ப்பிருந்தால் சீக்வெல் பண்ணுவோம்' என்று ரெண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கு, ஓ! போட வைத்தது.

சிம்புவை வைத்து 2

சிம்புவை வைத்து 2

இயக்குநர்களுக்கு அடங்காத, இம்சையை கூட்டுகின்ற ஹீரோவாக பார்க்கப்படும் சிம்புவை வைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா! அச்சம் என்பது மடமையடா!' என இரண்டு ஹிட் படங்கள் அவர் கொடுத்தபோது தெறித்தது கோடம்பாக்கம்.

வேற லெவல் அஜீத்

வேற லெவல் அஜீத்

சூர்யாவை தரமான ஹீரோவாக்கியதும், தல அஜித்தை வேற லெவலில் வடிவமைத்ததும், ஜோதிகாவின் நடிப்பாளுமையை மேலும் மேலும் கூராக்கியதும், சமந்தாவுக்கு செம்ம ஓப்பனிங் கொடுத்ததும் ....என சொல்லிக் கொண்டே போகலாம் கவுதமின் சினிமா சாதனைகளை.

கஷ்டத்தில் கெளதம் மேனன்

கஷ்டத்தில் கெளதம் மேனன்

இப்பேர்ப்பட்ட கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய கஷ்டத்தில் உழல்கிறார். சொந்தப்படம் எடுத்தது உள்ளிட சில விஷயங்கள் அவரை பெரிதாய் லாக் ஆக வைத்துவிட்டன கடனில். மீளலாம், மீளலாம் என நினைக்கும் அவருக்கு சறுக்கலே பதிலாய் அமைகிறது.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என தமிழ் சினிமாவின் தேசிய செலிபிரெட்டிகளான தனுஷ் மற்றும் விக்ரம் ஆகியோரை வைத்து இவர் இயக்கிய படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதில் தனுஷின் படம் இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, விக்ரம் படம் உயிர்த்தெழும் அறிகுறியே இதுவரையில் இல்லை.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

இந்நிலையில் விஷாலை வைத்து கவுதம் இயக்க கே.பி.பிலிம்ஸ் பாலுன் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் முன்பணமாக கவுதம் சில கோடிகளை கேட்க, பாலுவோ இயக்குநரையே மாற்றிவிட்டார். கவுதமின் நிலை இப்படித்தான் கந்தலாகிக் கொண்டிருக்கிறது.

புதைகுழியில் கலைஞன்

புதைகுழியில் கலைஞன்

வெறும் பணத்துக்காக ஒரு மகா கலைஞன் புதைகுழியில் அமிழ்வது கலையுலகத்துக்கு நல்லதில்லை. சூர்யா, அஜித், கமல் என அவரால் நன்மை பெற்ற நாயகர்கள் அவருக்கு அபயக்கரம் கொடுக்கலாம், தப்பே இல்லை. கண் முன்னே ஒரு கலைஞனை வெறும் கரன்ஸிக்கு காவு கொடுக்க கூடாது. இந்த உதவியை செய்வார்களா? அவர்கள் செய்வார்களா?

வெயிட்டிங் ஜி

வெயிட்டிங் ஜி

அல்லது ‘நன்றி மற!' என்பதுதான் சினிமா உலகின் வேத வாக்கியம் என்று ஒரு அநியாயத்தை மீண்டும் நியாயமாக்கியபடியே நகர்வார்களா. மீண்டு வாங்க கவுதம்! வீ ஆர் வெயிட்டிங்!

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X