நான் செய்த பணிகளுக்கு கமல் ஹாஸன் சம்பளமே தரவில்லை! - கௌதமி புகார்

By Shankar

Recommended Video

கவுதமி இப்போது மட்டும் கமல் மீது குறை கூறுவது ஏன்?- வீடியோ

சென்னை: கமல் ஹாஸன் படங்களில் நான் செய்த பணிகளுக்கு இன்னமும் சம்பளமே தரவில்லை என்று நடிகை கௌதமி குற்றம்சாட்டியுள்ளார்.

பத்தாண்டுகள் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்தார் கௌதமி. கிட்டத்தட்ட மூன்றாவது மனைவி என்ற நிலையில் அவர் வாழ்ந்து வந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டுப் பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை.

இப்போது கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து கமலும், கௌதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள கௌதமி, "நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை," என்று கூறியுள்ளார்.

உடையலங்கார நிபுணர்

உடையலங்கார நிபுணர்

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "கமல்vஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நான் திரை தொடர்பான பல்வேறு பணிகளை அவருக்காக செய்தேன். கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். கமல் நடித்த விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார நிபுணர் பணியை நான்தான் செய்தேன்.

சம்பளம் தரவில்லை

சம்பளம் தரவில்லை

ஆனால், அதற்குத் தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை. நான் கேமராவுக்கு முன்பும், பின்பு இருந்தும் பல பணிகளை செய்துள்ளேன். அதற்கான பணமும் வரவில்லை.

இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை.

வருமானமே இதுதான்

வருமானமே இதுதான்

இதுபோன்ற பணிகள் மூலம்தான் எனக்கு வருமானம் வருகிறது. அதை வைத்துதான் நான் வாழ்க்கையை உருவாக்க வேண்டும். ஆனால், சம்பள பாக்கி தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஸ்ருதி காரணம் அல்ல

ஸ்ருதி காரணம் அல்ல

நானும், கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்‌ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது.

இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலும், சுய மரியாதையை இழக்கக் கூடாது என்பதாலும் நான் பிரிந்து வந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X