twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி.வி, சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அரசு அனுமதி.. கட்டுப்பாடுகளை கடைபிடிக்கணும்!

    By
    |

    சென்னை: சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தனர்.

    சாமியை குளிக்க வைக்கிறத காட்றீங்க.. துணி மாத்துறத மறைக்கிறீங்க.. மீண்டும் சர்ச்சையில் விஜய் சேதுபதி!சாமியை குளிக்க வைக்கிறத காட்றீங்க.. துணி மாத்துறத மறைக்கிறீங்க.. மீண்டும் சர்ச்சையில் விஜய் சேதுபதி!

    போஸ்ட்-புரொடக்சன்

    போஸ்ட்-புரொடக்சன்

    அப்போது ' 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், படங்களை தயார் செய்ய முடியும்.

     கலைப்புலி எஸ். தாணு

    கலைப்புலி எஸ். தாணு

    அதனால் நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் (பெப்சி) இதே கோரிக்கையை வைத்தது. பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், கேயார், கே. முரளிதரன், டி.சிவா, பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர் உட்பட பல தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

    அனுமதி அளித்துள்ளது

    அனுமதி அளித்துள்ளது

    இந்நிலையில் தமிழக அரசு, வரும் 11 ஆம் தேதி முதல், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க கோரிக்கை வைத்திருந்தனர். அதை பரிசீலித்த முதலமைச்சர், வரும் 11 ஆம் தேதி முதல் அந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

    Recommended Video

    Serial Shooting தொடங்கனும் நடிகை Kushbu அமைச்சரிடம் கோரிக்கை
    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    அதன்படி, படத்தொகுப்பு (5 பேர்) , கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்) டப்பிங் (5 பேர்), டி.ஐ (5 பேர்), பின்னணி இசை (5 பேர்), சவுண்ட் மிக்சிங் ( 5 பேர்) ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணியில் ஈடுபடுபவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று தந்து, சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Government gives permission to resume post production works
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X