twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    13+, 16+ அடல்ட் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.. ஒடிடி தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்!

    |

    சென்னை: அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டப்பாடுகளை விதித்துள்ளது.

    சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விதிமுறைகளை வெளியிட்டனர்.

    தனி அதிகாரி வேண்டும்

    தனி அதிகாரி வேண்டும்

    அதன்படி சமூக வலைதளங்களில் ஆபாசமான போட்டோக்கள் தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அவை நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் புகார்களை கையாள தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

    5 ஆண்டுகள் சிறை

    5 ஆண்டுகள் சிறை

    தவறான தகவல்களை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்படும்

    தண்டனை விதிக்கப்படும்

    மேலும் அரசு, நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைதளம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்காவிட்டால் 5 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    மேலும் அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, ஓடிடி தளங்கள் 3 விதமான தணிக்கை சான்றிதழ்களை பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது.

    13+, 16+, அடல்ட்

    13+, 16+, அடல்ட்

    வன்முறை, ஆபாசம், மொழி, பாலினம் அடிப்படையில் ஒடிடி படங்களை வகைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    மேலும் ஓடிடியில் 13+, 16+ அடல்ட் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    சில வரைமுறைகள்

    சில வரைமுறைகள்

    ஓடிடி தளங்களுக்கு விதிமுறைகளை உருவாக்குவது அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது, ஆனால் அதில் சில வரைமுறைகளும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    English summary
    Govt tightens regulations for OTT platforms and Social media. OTT sites should obtain 3 types of censor certificates according to the classifications laid by the government. Movies should be classified as 13+, 16+ Adult, government imposed restrictions on OTT sites!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X