twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் இசை அருங்காட்சியகம்... அரசு உதவ வேண்டும் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

    By R VINOTH
    |

    சென்னை: பெங்களூருவில் உள்ளது போல், சென்னையிலும் இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டார். சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சென்னையில் இசைக் கச்சேரி நடத்தும்போது மட்டுமே எனக்குள் ஒரு தனி உற்சாகம் ஏற்படுகிறது. நான் என் வீட்டில் உட்கார்ந்து இசையமைப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

    சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 10ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது. இதுபற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது அவர் இந்த இசைக்கச்சேரியில் லிடியன் நாதஸ்வரம் என்ற 11 வயது சிறுவன் கலந்துகொண்டு இசையமைத்து பாடவும் செய்கிறார். ஏ,ஆர்,ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்றவர். அதோடு அமெரிக்காவில் நடைபெற்ற இசைப்போட்டியில் பங்குபெற்று 7 கோடி ரூபாய் பரிசு பெற்றவர்.

    Government needs to help to set up museum-A.R.Rahman

    சென்னையில் இசைக் கச்சேரி நடத்தும்போது மட்டுமே எனக்குள் ஒரு தனி உற்சாகம் ஏற்படுகிறது. நான் என் வீட்டில் உட்கார்ந்து இசையமைப்பது போல் உள்ளது. இந்த இசைக்கச்சேரியில் வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு இசையமைத்து பாடப்போகிறார்கள். இதன்மூலம் இரு நாடுகளின் இசை இணைவு ஏற்பட்டு கலாச்சாரப் பரிமாற்றமும் ஏற்படும் என்றார்.

    இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்பாடல்கள் தான் அதிக அளவில் இடம்பெறும். காதலன் படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி பாடலில் சிறிய மாற்றம் செய்திருக்கிறோம் என்று கூறினார்.

    பேட்டியின் போது உங்கள் மகனும் உங்களைப் பின்தொடர்ந்து இசைப் பாதையில் பயணிக்க வருகிறார். அவருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்டதற்கு, நான் அவருக்கு அறிவுரை சொல்வதையே நிறுத்திவிட்டேன். காரணம், அவர் தனக்கு தேவையானதை எல்லாம் கூகுளில் இருந்தே கற்றுக்கொள்கிறார் என்றார்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடலாசிரியர் வாலி போன்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளீர்கள். அவர்களுக்காக சிலை வைக்கு பெருமைப்படுத்தும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, பெங்களூருவில் இசை அருங்காட்சியகம் உள்ளது. அதே மாதிரி சென்னையிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அரசும் அதற்கு உதவ வேண்டும் என்றார்.

    English summary
    At a press conference in Chennai, AR Rahman asked the Tamil Nadu government to help the museum to honor musicians in Chennai, as in Bangalore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X