twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எளிய மக்கள் பக்கம் நின்ற சந்துரு....ஜெய்பீம் ஒரு துளி மட்டுமே...அம்பேத்கர் விருது ஒரு பார்வை

    |

    மக்களுக்காக உண்மையாக உழைக்கும் யாருடைய உழைப்பும் போற்றப்படும், அதிலும் விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் எவரும் கண்டிப்பாக மதிக்கப்படுவார்கள். சமீபத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யா இருளர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து போராடி நீதி பெற்றுத்தருவார். இப்படம் பார்த்தவர்கள் நெஞ்சை கனக்க செய்தது. அந்தக்கதையின் நிஜ கதாநாயகர் நீதியரசர் சந்துரு. அவருக்கு அரசின் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 5: யாருக்கு அதிக ஓட்டு? யார் கடைசி இடத்தில்? எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா?பிக் பாஸ் தமிழ் சீசன் 5: யாருக்கு அதிக ஓட்டு? யார் கடைசி இடத்தில்? எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா?

     தமிழக அரசின் விருது

    தமிழக அரசின் விருது

    தமிழக அரசு ஆண்டுதோறும் மக்கள் பணியில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகளை தேர்வு செய்து அம்பேத்கர் விருது, பெரியார் விருது போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. அம்பேத்கரும், பெரியாரும் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் போராடியவர்கள். அவர்கள் பெயரால் வழங்கப்படும் விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்போது பெருமை அடைகிறது.

     அம்பேத்கர் விருதின் பெருமை

    அம்பேத்கர் விருதின் பெருமை

    அந்த வகையில் இந்த ஆண்டு அம்பேத்கர் விருது ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுதான் அவரது சட்டபோராட்டத்தின் சிறுபகுதியை மையமாக வைத்து கதைக்கருவில் அமைக்கப்பட்ட ஜெய்பீம் படம் வெளியாகி வெற்றிப்பெற்றது அனைவரும் அறிந்ததே. அம்பேத்கர் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தளகர்த்தர். தனது வாழ்நாளில் நேரடியாக ஜாதிக்கொடுமையை அனுபவித்தவர். அதனால் அவர் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல அரிய சட்டவிதிகளை உருவாக்கினார்.

     வாழும் சாதனையாளர் சந்துரு

    வாழும் சாதனையாளர் சந்துரு

    அவரை பின்பற்றி சமூக நீதி பாதையில் நடைபோட்ட பல சட்ட வல்லுநர்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். பலர் நீதிபதிகளாகி பல அரிய தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களில் பலர் மறைந்துப்போனாலும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டிருப்பவர் ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு.

     ஜெய்பீம் நிஜ நாயகன்

    ஜெய்பீம் நிஜ நாயகன்

    ஜெய்பீம் கதை உருவானபோது அதன் மையக்கரு உண்மையாக லாக்கப் மரணத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பத்துக்காக வழக்கறிஞர் சந்துரு நடத்திய சட்டப்போராட்டமும், அது மக்கள் இயக்கமாக மாறியதும், முடிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்மூலம் வழக்கறிஞர் சந்துரு நீதியைப் பெற்றுத்தந்ததன் உண்மைச் சம்பவமே என்பதால் படம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

     ஜெய்பீம் ஒரு துளி மட்டுமே

    ஜெய்பீம் ஒரு துளி மட்டுமே

    ஏதோ ஒரு சம்பவத்தில் அவர் இவ்வாறு நீதியை போராடி பெற்றுத்தந்தார் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் மக்களுக்காக போராடி இலவசமாக வாதாடி நீதியைப்பெற்றுத்தந்தார் சந்துரு. சாதாரண மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், போராட்டக்காரர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் என்பதால் இவருக்கு நீதிபதி பதவி மறுக்கப்பட்டபோது வழக்கறிஞர் யாருக்காகவும் வாதாடலாம் அது அவரது தொழில் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீதிபதி நியமனம் இவருக்கு கிடைத்தது.

     சந்துரு வாழ்க்கையை திருப்பிய நீதிபதி

    சந்துரு வாழ்க்கையை திருப்பிய நீதிபதி

    போராட்டமே வாழ்க்கையாக கொண்ட போராளி, அதற்காக கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் வெளியேற்றப்பட்டு பின்னர் வேறொரு பள்ளியில் படிப்பை முடித்தார், அரசியல்வாதியாக போயிருக்க வேண்டியவர், ஒரு போராட்டத்தில் கைதான போது நீதிபதி இவரது வேகத்தையும் மன உறுதியையும் கண்டு நீ சட்டம் பயின்று வழக்கறிஞராகி நியாயத்துக்காக போராடலாமே என்று சொன்னது அவர் வாழ்க்கையை நீதிமன்றம் பக்கம் திருப்பியது.

     96000 வழக்குகளில் தீர்ப்பளித்தவர்

    96000 வழக்குகளில் தீர்ப்பளித்தவர்

    வழக்கறிஞராக அவர் பணம் வாங்கி வாதாடியதைவிட, இலவசமாக எளிய மக்களுக்காக வாதாடியதுதான் அதிகம் என்கின்றனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நீ நீதிபதியாகவேண்டும் என்று சொன்னதை வைத்து அதற்கான முயற்சியில் இறங்கி நீதிபதியானார். தனது வாழ்க்கையில் 96000-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பளித்து வேகமான நீஇதிபதி என பெயர் எடுத்துள்ளார்.

    Recommended Video

    நான் பேசுறதை பார்த்து உனக்கு படமே கிடைக்காதுன்னு சொன்னாங்க | Pa.Ranjith Q&A Session | Writer
     பொருத்தமான அம்பேத்கர் விருது

    பொருத்தமான அம்பேத்கர் விருது

    இவர் தீர்ப்புகளின்போது குறிப்பிடும் வாசகங்கள், தீர்ப்புக்காக எழுதும் கருத்துகள் இன்றும் நீதிமன்றங்களில், சட்டப்படிப்பில் மேற்கோளாக காட்டப்படும் அழவுக்கு ஆழமான சமுதாய, சட்டக்கருத்துக்களை கொண்டது என்கின்றனர். ஜெய்பீம் படம் காட்டியது ஒரு சிறு சம்பவத்தை மட்டுமே, இதுபோல் ஓராயிரம் சம்பவங்களுக்கு நெகிழ்ச்சியூட்டும் விஷயங்களுக்கு சொந்தக்காரரான ஜெய்பீம் நிஜ நாயகன் சந்துருவுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது பொருத்தமான ஒன்று.

    English summary
    Government of Tamil Nadu Ambedkar Award for 'Jai Beam' Real Hero....
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X