விஜய் CM ஆவது உறுதியா? ஆளுநரின் முடிவு என்ன? தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. ஆளுநரை இரண்டாவது முறையாக சந்தித்த பிறகு, "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என்று விஜய் உறுதியாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகம்: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவை அளித்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.
40 நிமிட சந்திப்பு: ஆனால் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியது. இதையடுத்து இன்று காலை இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்கும் உரிமை கோரினார். 40 நிமிடம் நடந்த சந்திப்பில் "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என்று விஜய் உறுதியாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை சற்றுநேரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்: ஆளுநரை சந்தித்த விஜய் தனது பட்டினப்பாக்கத்தில் ஜான் ஆரோக்கிய சாமி, என். ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதே நேரம் திமுக எம்எல்ஏக்கள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே போல இன்றுமாலை 5 மணிக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications