இந்தி நடிகர் கோவிந்தா மனைவியை பிரிந்தார்..முடிவுக்கு வந்த 37 ஆண்டு திருமண வாழ்க்கை!
சென்னை: இந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரான கோவிந்தா தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.37 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பாலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவாகரத்து என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு எதற்கு எடுத்தாலும் விவாகரத்துகள் நடந்து வருகிறது. திருமணமான புதிதில் தான் புரிதல் இல்லாமல் விவாகரத்து நடக்கிறது என்று நினைத்தால், திருமணமாகி பல ஆண்டு வாழ்ந்த தம்பதிகளும் அதே புரிதல் இல்லை, கருத்துவேறுபாடு காரணமாக பிரிகிறோம் என சொல்லி பிரிகின்றனர். அண்மையில் ஏஆர் ரஹ்மானின் மனைவி, 30 ஆண்டுகளுக்கு பின் கணவரை பிரிவதாக அறிவித்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நடிகர் கோவிந்தா: அதே போலத்தான், இந்தி நடிகர் கோவிந்தா 37 வருட திருமண வாழ்க்கைக்கு பின் தனது மனைவி சுனீதாவை பிரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதிக்கு யஷ்வர்தன் மற்றும் டினா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு, சண்டை வந்ததை அடுத்து இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கோவிந்தா மற்றும் சுனிதாவின் திருமண வாழ்க்கை முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், இவர்களின் விவாகரத்து செய்தி விரைவில் வெளியாகும் என ஆங்கில பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி குறித்து தம்பதியினர் அமைதியாக இருப்பதால், இது உண்மை என நம்பப்படுகிறது.
பிரிந்து வாழ்ந்து வருகிறோம்: கடந்த மாதம், கோவிந்தாவின் மனைவி சுனிதா அளித்த பேட்டியில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து பேசினார். அதில், நான் என் கணவர் கோவிந்தாவிடன் சேர்ந்து வாழவில்லை. நான், குழந்தைகளுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறேன். அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். முன்பு திருமண உறவில் ஒரு பாதுகாப்பு இருந்தது. அந்த பாதுகாப்பு இப்போது இல்லாததால் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்
அவர் எப்போதும, நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு தாமதமாகத்தான் வருவார். கோவிந்தா நண்பர்களுடன் இருப்பதைத்தான் பெரிதும் விரும்புவார். நான், என் மகன் மற்றும் என் மகளுடன் ஒன்றாக வாழ்கிறோம், அவருடன் நாங்கள் அதிகமாக பேசியதே இல்லை அந்த பேட்டியில் கோவிந்தாவின் மனைவி வருத்தப்பட்டு பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











