நடிகர் கோவிந்தா மகள் சினிமாவில் நடிக்கிறார்

By Shankar

மும்பை: தன் மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவருக்கு நர்மதா என்ற மகளும், யஷ்வர்தன் என்ற மகனும் உள்ளனர். 22 வயதாகும் தன்னுடைய மகளை சொந்த தயாரிப்பில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளார் கோவிந்தா.

நர்மதா அறிமுகமாக உள்ள படம் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நர்மதாவுடன் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவிந்தா கூறுகையில், "படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். நான் ஆரம்பத்தில் படம் தயாரித்தேன். ஆனாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அப்போது என்னுடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு ஆறுதல் அளித்தார்கள்.

என்னுடைய மகள் (நர்மதா) எனது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார். அவருக்காக நல்ல கதையம்சம் கொண்ட படத்தைத் தயாரிப்பேன். அதற்கான முயற்சியில் உள்ளோம். அவர் பாலிவுட்டில் அவருக்குரிய இடத்தை பிடிப்பார்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X