34 வயதில் வாரிசு இயக்குனர் மாரடைப்பால் மரணம்: பிரபலங்கள் அதிர்ச்சி

By Siva

Recommended Video

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் அண்ணன் மகனின் இறுதிச் சடங்கு

மும்பை: பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் அண்ணன் மகனும், இயக்குனருமான ஜன்மேந்திர அஹுஜா 34 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் அண்ணன் கிரித்தி குமாரின் மகன் ஜன்மேந்திர அஹுஜா(34). அவர் தனது சித்தப்பா கோவிந்தாவை வைத்து ஜஹான் ஜாயேஜா ஹமேன் பேயேகா என்கிற படத்தை இயக்கினார். முன்னதாக கோவிந்தாவின் பியார் தீவானா ஹோதா ஹை படத்தில் உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார்.

ஜன்மேந்திரா தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார்.

மரணம்

மரணம்

ஜன்மேந்திர அஹுஜா நேற்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தார் அறிவித்தனர்.

 இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

ஜன்மேந்திராவின் மரண செய்தி அறிந்து கோவிந்தா தனது குடும்பத்துடன் அங்கு வந்தார். ஜன்மேந்திராவின் இறுதிச் சடங்கு நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. அதில் கோவிந்தா, அவரின் மகன் யஷ்வர்தன் மற்றும் பாலிவுட்காரர்கள் கலந்து கொண்டனர். 34 வயது ஜன்மேந்திரா மாரடைப்பால் மரணம் அடைந்தது பாலிவுட்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கோவிந்தாவின் உறவினரான கிருஷ்ணா அபிஷேக்கின் மனைவியான நடிகை காஷ்மீரா ஷாவோ ஜன்மேந்திரா இயற்கையாக மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

 காதர் கான்

காதர் கான்

ஜன்மேந்திரா இயக்கிய ஜஹான் ஜாயேஜா ஹமேன் பேயேகா படத்தில் நடித்த காதர் கான் இந்த மாதம் தான் கனடாவில் மரணம் அடைந்தார். இந்நிலையில் ஜன்மேந்திரா மரணம் அடைந்துள்ளார். அடுத்தடுத்த இழப்புகள் கவலை அளிப்பதாக பாலிவுட்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X