எப்படி அப்படி சொல்லலாம்? ஜோதிகாவுடன் மல்லுக்கட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள்! ராட்சசிக்கு எதிர்ப்பு!
Recommended Video
சென்னை: நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி படத்திற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை ஜோதிகா பிக்கில் இருந்தபோதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிவகுமார் வீட்டு மருமகள் ஆன பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
பின்னர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் 36 வயதினிலே படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இந்த படம் எதிர்பார்த்தப்படியே கை கொடுக்க, தொடர்ந்து அதுபோன்ற படங்களை தேர்வு செய்து வருகிறார்.

ராட்சசி படம்
தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'.

ஆசிரியர்கள் எதிர்ப்பு
இந்த படத்திற்கும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. ஆனாலும் ராட்சசி படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதாவது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை
காரணம் ராட்சசி படத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் வசனங்களும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளை இழிவு படுத்தும் வகையில் உள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

கொதிப்பு
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் கதை புக் படித்து கொண்டிருப்பது போலவும் செல்போனை நோண்டிக்கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொதித்துள்ளனர்.

கண்டனம்
அதிக சம்பளம் பெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கவனம் செலுத்தாததால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்க முடியவில்லை என்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலுக்கும் எதிர்ப்பால் படக்குழு கலக்கம் அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications