கவுண்டமணியை வாழவைத்த காமெடி வீரப்பன் மரணம் நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்காக பல புகழ் பெற்ற வசனங்களை எழுதிய நடிகர் காமெடி புகழ் வீரப்பன்மரணமடைந்தார்.காமெடி வீரப்பன் என திரையுலகினரால் அழைக்கப்பட்டவர் ஏ.கே.வீரப்பன். பழம்பெரும் நடிகரான இவர், பணத்தோட்டம்,படகோட்டி, சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் பிற்கால நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்தார்.குறிப்பாக கவுண்டமணி புகழ் பெறக் காரணமாக இருந்த பல நகைச்சுவை வசனங்களையும், காட்சிகளையும் அமைத்தவர்வீரப்பன்தான்.பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதய கீதம், சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் என கவுண்டமணியின்பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் காமெடி காட்சிகளை அமைத்தார்.இந்த நகைச்சுவைக் காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்றும் ரசித்துப் பார்க்கப்படுகின்றன.ஆரம்பத்தில் சிவாஜி கணேசனுடன் சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தார் வீரப்பன். தமிழக அரசின் கலைமாமணிவிருதும் பெற்றுள்ளார்.நடிப்பு, வசனம் எழுதியது தவிர தெய்வீக ராகங்கள் என்ற படத்தையும் இயக்கியவர் வீரப்பன். 72 வயதான வீரப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒருமகன் உள்ளனர்.
நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்காக பல புகழ் பெற்ற வசனங்களை எழுதிய நடிகர் காமெடி புகழ் வீரப்பன்மரணமடைந்தார்.
காமெடி வீரப்பன் என திரையுலகினரால் அழைக்கப்பட்டவர் ஏ.கே.வீரப்பன். பழம்பெரும் நடிகரான இவர், பணத்தோட்டம்,படகோட்டி, சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் பிற்கால நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்தார்.குறிப்பாக கவுண்டமணி புகழ் பெறக் காரணமாக இருந்த பல நகைச்சுவை வசனங்களையும், காட்சிகளையும் அமைத்தவர்வீரப்பன்தான்.
பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதய கீதம், சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் என கவுண்டமணியின்பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் காமெடி காட்சிகளை அமைத்தார்.
இந்த நகைச்சுவைக் காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்றும் ரசித்துப் பார்க்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் சிவாஜி கணேசனுடன் சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தார் வீரப்பன். தமிழக அரசின் கலைமாமணிவிருதும் பெற்றுள்ளார்.
நடிப்பு, வசனம் எழுதியது தவிர தெய்வீக ராகங்கள் என்ற படத்தையும் இயக்கியவர் வீரப்பன். 72 வயதான வீரப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒருமகன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











