மயில் போல பொண்ணு ஒன்னு... பச்சை நிறத்தில் மயில் போல மயக்கும் கௌரி கிஷான்!
சென்னை : நடித்த சில படங்களிலேயே ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்றவர் நடிகை கௌரி கிஷான்.
மாஸ்டரை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியுள்ள கௌரி விரைவில் தமிழில் ஹீரோயினியாக அறிமுகமாக இருப்பதை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது பச்சை நிற மயில் போல இருக்கும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மயக்கி வருகிறார்.

முன்னணி நடிகர்களின்
96 திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி குட்டி ஜானு வாக அனைவரையும் வசியம் செய்த நடிகை கௌரி கிஷான் இப்போது சினிமாவில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறார். இதுவரை தமிழில் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில்
96 கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டரில் நடித்திருந்த கௌரிக்கு ஜாக்பாட் அடித்தது போல தனுஷ் செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தூள் கிளப்பி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

கதாநாயகியாக நடிப்பார்
தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் இவர் மலையாளத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான அனுகிரகீதன் ஆண்டனி வெற்றி பெற்றதுடன் ஹீரோயின் அந்தஸ்தையும் பெற்று தந்துள்ளது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல கதைகளில் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களை மயக்கி
96, மாஸ்டர், கர்ணன் என தொடர் வெற்றிகளை கொடுத்த கௌரியின் அடுத்த தமிழ் படம் எதுவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க பச்சை நிற உடையில் தோகை விரித்தாடும் மயில் போல பச்சை மயில் கௌரி கிஷான் வெளியிட்டுள்ள இந்த க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களை மயக்கி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சிலர் மயில் போல பொண்ணு ஒன்னு என வர்ணித்து பாடியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











