அஜீத், விஜய் படங்கள் கற்றுத் தந்த பாடம்: சூர்யாவிடம் மடங்கிய கௌதம் மேனன்

By Siva

சென்னை: கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் பட விவகாரத்தில் சூர்யாவுக்காக இறங்கி வந்துள்ளாராம்.

கௌதம் மேனன் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படம் எடுக்கிறார் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். படத்திற்கான பூஜை கூட நடந்தது. ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தான் துவங்கவில்லை.

இந்நிலையில் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. அது உண்மை என்பது போல் சூர்யாவும் லிங்குசாமியின் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

சூர்யாவுக்காக

சூர்யாவுக்காக

துருவ நட்சத்திரத்தின் கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு சூர்யா கூற கௌதம் மறுக்க பிரச்சனை வெடித்தது. இதையடுத்து தற்போது கௌதம் சூர்யாவுக்காக இறங்கி வந்து அவர் கூறியபட கதையை மாற்றியுள்ளாராம்.

நாயகி யாரோ?

நாயகி யாரோ?

துருவ நட்சத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார், சமந்தா நடிக்கிறார், அமலா பால் நடிக்கிறார், துளசி நடிக்கிறார் என்று செய்தி வந்தது. ஆனால் இறுதி வரை அவர்கள் யாரும் நாயகியாக ஒப்பந்தம் ஆனதாக தெரியவில்லை.

அஜீத், விஜய்

அஜீத், விஜய்

அஜீத்தை வைத்து எடுப்பதாக இருந்த துப்பறியும் ஆனந்த் மற்றும் விஜய் நடிக்கவிருந்த யோஹான்- அத்தியாயம் 1 ஆகிய படங்கள் கதை பிரச்சனையால் தான் கைவிடப்பட்டன.

எதுக்கு வம்பு

எதுக்கு வம்பு

ஏற்கனவே அஜீத், விஜய் என்று இரண்டு முன்னணி நடிகர்களுடனான தனது படங்கள் கைவிடப்பட்டதால் மேலும் சூர்யாவின் படத்தை கைவிட்டுவிட்டு திரை உலகில் கெட்ட பெயர் எடுக்க விரும்பவில்லையாம் கௌதம். அதனால் தான் இறங்கி வந்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X