கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.
மாயாண்டி குடும்பத்தார் சீகுவலாக உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற குடும்ப உறவுகளை சொல்லும் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் இயக்கும் செல்லப்பிள்ளை படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில் தற்போது டீஸர் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வெற்றிப்படங்களை
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக் தனது நேச்சுரலான நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மிகச் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

சர்ச்சைக்குரிய படங்களிலும்
என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம்,ரங்கூன்,இவன் தந்திரன் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் கௌதம் கார்த்தி ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என சில சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஜோடியாக பிரியா பவானி சங்கர்
கன்னடத்தில் மாபெரும் ஹிட்டடித்த மஃப்டி பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட அதில் கேங்ஸ்டர் டானாக சிம்பு நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் இரண்டாவது கதாநாயகராக கௌதம் கார்த்திக் நடிக்க இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது மேலும் இதில் கௌதமுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மோஷன் டீஸர் வெளியாகிறது
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் செல்லப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்க தற்போது அதன் டீஸர் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி காலை 11:05 க்கு செல்லப்பிள்ளை மோஷன் டீஸர் வெளியாகிறது. இதனை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications