பயந்துட்டே இருக்கிறவங்களுக்கு எதுக்கு சுதந்திரம் - கவனம் ஈர்க்கும் கௌதம் கார்த்திக் பட ட்ரெய்லர்

சென்னை: கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கோலிவுட்டின் நவரச நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் கார்த்தி. அவரது மகன் கௌதம் கார்த்திக். இவரும் தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் நடித்துவருகிறார். சிம்புவுடன் பத்து தல படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

கடல் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக்

கடல் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அறிமுகமே இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மணிரத்னத்தின் இயக்கத்தில் நடந்ததால் கௌதம் கார்த்திக் மீதும், படம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. கௌதம் கார்த்திக்கின் நடிப்பும் ஓரளவே வரவேற்பைப் பெற்றது. இதனால் கௌதம் கார்த்திக் மீதான எதிர்பார்ப்பு முதல் படத்தில் காலியானது.

அடுத்தடுத்து நடித்தாலும் ஹிட் இல்லை

அடுத்தடுத்து நடித்தாலும் ஹிட் இல்லை

முதல் படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கௌதம் கார்த்திக். அப்படி அவர் நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கென்று திருப்புமுனை இன்றுவரை கிடைக்கவில்லை. இதில் முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்காக கௌதம் கார்த்திக் ஒரு தரப்பினரிடம் விமர்சனங்களையும் சந்தித்தார்.

பத்து தல படத்தில் சிம்புவுடன் கௌதம்

பத்து தல படத்தில் சிம்புவுடன் கௌதம்

சினிமாவில் பெரும் வெற்றிக்காக காத்திருக்கும் கௌதம் கார்த்திக் பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான முஃப்தி படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் மூலமாவது தனக்கு ஒரு ஹிட் அமைந்துவிட வேண்டும் என கௌதம் கார்த்திக் எதிர்பார்த்திருக்கிறார்.

ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கும் புதிய படம்

ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கும் புதிய படம்

இதற்கிடையே ஹீரோவாக நடிப்பதற்கு ஆகஸ்ட் 16 - 1947 என்ற படத்தில் கமிட்டானார் கௌதம் கார்த்திக். பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய என்.எஸ். பொன்குமார் இயக்கியிருக்கிறார். ஷான் ரால்டன் படத்துக்கு இசையமக்க அறிமுக நடிகை ரேவதி நடித்திருக்கிறார்.

கவனம் ஈர்க்கும் ஆகஸ்ட் 16 - 1947 ட்ரெய்லர்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ட்ரெயுலர் வெளியாகியிருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் இந்தியா அடிமையாக இருந்தபோது நடந்த பிரச்னை குறித்து படம் அமைந்திருப்பதும்; கௌதம் கார்த்திக் போராட துடிக்கும் இளைஞராகவும் நடித்திருக்கிறார் எனவும் ட்ர்யெலரை பார்க்கும்போது தெரிகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. குறிப்பாக பீரியட் பிலிம்க்கான மேக்கிங் சிறப்பாக இருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது எனவும் ரசிகரக்ள் புகழ்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X