Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்க்கு டிக் அடித்த கௌதம் மேனன்.. எதுக்குன்னு தெரியுமா.. பாக்கலாங்களா?
சென்னை : நடிகர் விஜய் இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
Recommended Video
இவரது படங்களுக்கு சர்வதேச அளவில் சிறப்பான மார்க்கெட் காணப்படுகிறது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் இதற்கு சிறப்பான உதாரணமாக காணப்படுகிறது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் வசூல் மட்டும் 200 கோடி ரூபாய்களை தாண்டியே காணப்பட்டது.
என்னது ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு ஹார்மோன் பிரச்சனை இருக்கா? PCOS இருக்கு என அவரே சொல்லிட்டாரே!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் சர்வதேச அளவில் தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான பீஸ்ட் படமும் சிறப்பான விமர்சனங்களை பெறவில்லை என்றபோதிலும் வசூலில் சாதித்தது.

கரடுமுரடான பாதை
சிறுவயதிலிருந்தே நடித்து வருகிறார் விஜய். நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவரது சக்சஸ் மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு தெரியும். ஆனால் தற்போதைய நிலையை அடைய அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இதை அவர் தனது அதிகமான பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இழந்தது குறித்து விஜய்
சினிமாவிலேயே அதன் வெற்றியிலேயே கவனம் செலுத்தியதால் தான் இழந்தது அதிகம் என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல், தனக்கு வேண்டியதை செய்துக் கொள்ளாமல் தான் விட்டு விட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் வரும்மம் தெரிவித்திருந்தார்.

ஏராளமான தங்கைகள்
இந்நிலையில் சர்வதேச அளவில் அனைவரும் விரும்பும் பர்சனாலிட்டியாக, நடிகராக விஜய் காணப்படுகிறார். இவரது தங்கை சிறுவயதிலேயே உயிரிழந்த நிலையில், தற்போது இவருக்கு ஏராளமான தங்கைகள் காணப்படுகின்றனர். இதுகுறித்து இவரது அம்மா ஷோபா சந்திரசேகரும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

கௌதம் மேனனின் சாய்ஸ்
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் விரும்புபவராக விஜய் காணப்படுகிறார். எந்த ஒரு இயக்குநரும் தன்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான் என்பதை கூறக் கேட்டு வருகிறோம். அந்த லிஸ்ட்டில் பல முன்னணி இயக்குநர்கள் உள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல இயக்குநர் கௌதம் மேனன்.

பாண்டே கேள்விக்கு கௌதம் மேனன் பதில்
பிரபல ஊடகவியலாளர் பாண்டேவின் கேள்விகளுக்கு பதிலளித்த கௌதம் மேனன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவருக்கு விஜய் -அஜித் யாரை பிடிக்கும் என்று பாண்டே கேட்க, உடனடியாக விஜய் என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து ரஜினி அல்லது கமல் யாரை பிடிக்கும் என்ற பாண்டேவின் கேள்விக்கு கமல்ஹாசன் என்று பதிலளித்துள்ளார் கௌதம் மேனன்.

வைரலான வீடியோ
இதேபோல இளையராஜா அல்லது ஏஆர் ரஹ்மான் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு ஏஆர் ரஹ்மானே கௌதம் மேனனின் சாய்சாக காணப்படுகிறது. இதேபோல பாண்டேவின் பல கேள்விகளுக்கு கௌதம் மேனன் சிறப்பான பல சாய்ஸ்களை கைக்காட்டியுள்ளார். இந்த பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிப்பிலும் கவனம்
தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம் மேனன். சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இவர் இணைந்து நடித்திருந்த செல்ஃபி படம் ரிலீசானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவரது இயக்கத்தில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.