விரைவில் திரைக்கு வரும் துருவ நட்சத்திரம் .. அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்!

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

விக்ரம் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா இந்த படத்தில் இனைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக இந்த படம் நிலுவையில் உள்ளது.

கால தாமதம்

கால தாமதம்

கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்க அதில் என்னை நோக்கி பாயும் தோட்டா மட்டும் ஒரு வழியாக 2019ம் ஆண்டு வெளிவந்தது. துருவ நட்சத்திரம் இன்னும் நிலுவையில் உள்ளது.

நடிக்க தொடங்கினார்

நடிக்க தொடங்கினார்

இது ஒரு புறம் இருக்க கவுதம் மேனன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இயக்குவது மட்டுமன்றி நடிக்கவும் தொடங்கினார் கவுதம் மேனன்.
தற்போது நவரசா படத்தை இயக்கியும், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தும் முடித்துள்ளார் கவுதம் மேனன்.

டீசர், ட்ரைலர்

டீசர், ட்ரைலர்

துருவ நட்சத்திரம் படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நீண்ட காலம் ஆன நிலையில் படம் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.
தற்போது இதனை திரைக்கு கொண்டு வர துருவ நட்சத்திரம் படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து கவுதம் மேனன் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

VIKRAM FIRST LOOK | மொத்தமே FANBOY Moment தான் | Kamal Hassan, Lokesh Kanagaraj
இந்தாண்டு வெளியீடு

இந்தாண்டு வெளியீடு

போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதாகவும், திட்டமிட்ட படி படத்தை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடுவோம் என கவுதம் மேனன் உறுதியளித்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் கண்டிப்பாக ஒரு நற்செய்தியாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X