அய்யோ என்னையும் என் பொண்ணையும் அடிச்சி கொடுமை படுத்துறாங்க.. கதறி அழுத ஜி.பி. முத்து
சென்னை: சோஷியல் மீடியா மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் ஜிபி முத்து. அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கான கதவுகளும் திறந்தன. அங்கே நல்லபடியாகத்தான் விளையாடினார். கண்டிப்பாக டாப் 3 இடத்துக்குள் வருவதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. ஆனால் தன் பிள்ளைகளின் உடல்நலத்தை காரணம் காட்டி வெளியேறிவிட்டார். அதற்கு பிறகும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் மீதும், அவரது மகள் மீதும் தாக்குதல் நடந்திருக்கிறது.
சோஷியல் மீடியாதான் இப்போது பெரும்பாலான விஷயங்களை தீர்மானிக்கிறது. விஜய் இப்போது ஆட்சியை பிடித்தற்கே அவரது மேனேஜர் ஜெகதீஷுடைய ரூட் மீடியாதான் காரணம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படி ஒரு மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சோஷியல் மூலம் டிடிஎஃப் வாசன், மதன் கௌரி, ஜிபி முத்து பலர் பிரபலமடைந்திருக்கிறார்கள். இவர்களில் ஜிபி முத்து தனது வெகுளித்தனத்தால் பலராலும் ரசிக்கப்படக்கூடியவர். முக்கியமாக அவர் பேசும் விதமும், தூத்துக்குடி வட்டார வழக்கை இயல்பாக பயன்படுத்துவதும் அவர் ஃபேமஸாக காரணம்.

பிக்பாஸ் ஜிபி முத்து: அவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கிலான வியூஸ்களை பெற்றன. இதன் காரணமாக சரசரவென்று அவரது புகழ் உச்சாணியில் ஏறியது. அந்த பிரபல்யத்தின் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது. அவரும் உற்சாகமாக வீட்டுக்குள் சென்றார். போட்டியில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே விளையாண்டார். கண்டிப்பாக அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடுவார் என்றுதான் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ட்விஸ்ட் அடித்த ஜிபி முத்து: ஆனால் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை; அவரை பார்க்க வேண்டும் என சொல்லி சுய விருப்பத்தின் பேரில் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் அப்படி வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு சில படங்களில் தலை காண்பித்தார். மேலும் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் வீடியோக்கள் போடுவதையும் குறைக்கவில்லை. இந்நிலையில் அவர் இப்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜிபி முத்து வீடியோ: தன் மகள்களுடன் தோன்றி அந்த வீடியோவில் பேசியிருக்கும் முத்து, "திருச்செந்தூர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். என்னை அடித்துவிட்டார்கள். என் மகளையும் மார்பில் அடித்துவிட்டார்கள். கம்பியை வைத்து அடித்தார்கள். அனைத்து வீடியோக்களும் இருக்கின்றன. சட்டப்பூர்வமாக நீதிமன்றத்துக்கு போகிறேன். உங்கள் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துவிடுவோம் என்று சொல்கிறார்கள். என்னை இஸ்லாமிய கைகூலி என பரமசிவம் என்பவர் சொல்கிறார்.
கண்டிப்பாக நீதிமன்றம்தான்: நான் நீதிமன்றத்துக்கு சென்று தீர்ப்பு வாங்கியிருக்கிறேன். அதை எப்படி மதிக்காமல் இருக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பம், மகள்களி தரக்குறைவாக பேசுகிறார். கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றார். முன்னதாக, தனது சொந்த ஊரான உடன்குடியில் கீழத்தெரு மற்றும் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தார். அதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிகள் பிறந்தன. அதன் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
