ஜிபி முத்துவை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியிருந்து வெளியேற விரும்பும் தனலட்சுமி.. என்ன தாங்க நடக்குது?
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பான நிகழ்வுகளுடன் இரண்டாவது வாரத்தில் நடைபோட்டு வருகிறது.
முதல் நாளிலிருந்தே பல டாஸ்க்குகள், கோபங்கள், சண்டைகள் என களைகட்டி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி.
துவக்கத்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்துவரும் ஜிபி முத்து நிகழ்ச்சியின் முதல் தலைவராக மாறியுள்ளார். டான்ஸ் டாஸ்க்கிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து 6வது சீசனில் நுழைந்துள்ளது. கடந்த 9ம் தேதி சிறப்பான துவக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. துவக்கம் முதலே ரசிகர்களை கவர்ந்து சிறப்பான பல நிகழ்வுகளை கொடுத்து வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார் ஜிபி முத்து எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கூடுதல் அக்கறையை இவர் காட்டுவது அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரம்மாண்டமான கிளாக்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் தொங்கியபடி இருந்து நிகழ்ச்சியின் முதல் தலைவராக இவர் மாறியுள்ளார்.

ஜிபி முத்து ஆர்மி
தொடர்ந்து சக போட்டியாளர்களின் பேச்சுக்களையும், கலாய்ப்புகளையும் அழகாக சமாளித்து நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்து அவருக்காக ரசிகர்கள் ஆர்மி துவங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார் ஜிபி முத்து. ஆனால் தன்னுடைய குடும்பத்தை அதிகமாக மிஸ் செய்வதாக கடந்த இரு தினங்களாக கூறி வருகிறார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற விருப்பம்
முன்னதாக தன்னுடைய சகோதரர்களிடம் தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் தனக்கு மூச்சு முட்டுவதாகவும், சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்படுவதாகவும் தான் வெளியில் வர ஏதாவது செய்யும்படியும் வீடியோ மூலம் மெசேஜ் கொடுத்திருந்தார். இதையடுத்து தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் தனலட்சுமி.

சிறப்பான தனலட்சுமி
இவரும் ஆரம்பத்திலிருந்து நிகழ்ச்சியின் பரபரப்புக்கு காரணமாக அமைந்தார். ஜிபி முத்துவிடம் சண்டை பிடித்த இவர், அவரது ஆர்மியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளதாக கமெண்ட்களை வாங்கினார். டான்ஸ் டாஸ்கிலும் இவர் புடவை கட்டிக் கொண்டு ஆடிய ஆட்டம் வெற்றியையும் பாராட்டுக்களையும் குவித்துள்ளது.

பாடி ஷேமிங் செய்த அசல்
இதனிடையே இவருக்கும் அசல் கோளாறுக்கும் இடையில் தற்போது சண்டை மூண்டுள்ளது. அவர் தன்னை ஆண்டி, பெரியம்மா என்று கூறி பாடி ஷேமிங் செய்வதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் தனலட்சுமி. அவர்கள் இருவரையும் சக போட்டியாளர்கள் விலக்கி விட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தனலட்சுமியும் வெளியேற விருப்பம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் மிகவும் கஷ்டப்பட்டுதான் வந்தாலும் இந்த வாரத்தில் தான் வெளியேற விரும்புவதாக தனலட்சுமி பிக்பாசிற்கு மெசேஜ் கொடுத்துள்ளார். உள்ளேயே இருந்தால் தான் தன்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல் எதையாவது பேசிவிடுவேன் என்றும் அதனால் தன்னை இந்த வாரம் எப்படியாவது வெளியில் அனுப்பி விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முட்டிக் கொள்ளும் போட்டியாளர்கள்
20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் முதலில் அனைவரும் இணைந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது அனைவரும் முட்டிக் கொள்ளும் சூழல் அடிக்கடி ஏற்படுகிறது. சக போட்டியாளர்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை என்றும் அசல் கோளாறு உள்ளிட்டவர்கள் பாடி ஷேமிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படும் நிலையில் தனலட்சுமி இந்த முடிவை எடுத்துள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை
ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இந்த நிகழ்ச்சியின் பரபரப்பான கட்டங்களுக்கு மிகவும் துணை புரிந்து வரும் போட்டியாளர்கள். இவர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி எப்படி களைகட்டும் என்றும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக போட்டியில் நீடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











