பாடாய் படுத்துறாங்க., பேசியே சாகடிக்கிறாங்க சார்.. கமலிடம் குறை சொன்ன ஜி.பி.முத்து!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவிலும் ஜிபி முத்துவின் ரகளை ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

சனிக்கிழமை நிகழ்ச்சி சரவெடியாய் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஷோ எப்படி இருக்கப் போகுது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கோட்சூட் உடையில் செம மாஸாக கமல் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க விஜே மகேஸ்வரி விஜெ கதிரவன் பற்றி பேசும் காட்சிகள் என ஏகப்பட்ட கலாட்டாக்கள் இந்த புரமோவில் நிறைந்துள்ளன.

3வது புரமோ

3வது புரமோ

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான 3வது புரமோ தற்போது விஜய் டிவியின் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியாகி உள்ளன. இந்த முறை அன்சீன் புரமோவுக்கெல்லாம் ரசிகர்கள் காத்திருப்பதே இல்லை. போர் அடித்தால் நேரடியாக 24 மணி நேரம் ஓடக் கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கின்றனர்.

கதிர் பேசவே மாட்டார்

கதிர் பேசவே மாட்டார்

யார் கூட நீங்க அதிகமாக பேசுறீங்க என்பது போல கமல் கேட்க, விஜே கதிரவன் மகேஸ்வரியிடம் தான் எனக் கூறியுள்ளார். உடனே மகேஸ்வரி கதிர் என்கிட்ட பேசவே மாட்டார் சார். ஆல் ஓகேன்னு கேட்பார், கேட்டுவிட்டு போய்விடுவார் என சொல்ல கமல்ஹாசன், ஆல் ஓகேன்னு சொல்லி அவரை உட்கார வைத்து விட்டார்.

பேசுறது அவர் தானே

பேசுறது அவர் தானே

கதிர் எங்கேங்க பேசுறாரு, பெட்ல போய் உட்கார்ந்தாலும், துரத்தி வந்து ரகசியமாக மகேஸ்வரியிடம் மட்டும் ஸ்வீட்டா பேசுவது போல கடலை போட்டு வருகிறார் என நெட்டிசன்கள் இந்த புரமோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

எனக்கு ஜிபி முத்து தான்

எனக்கு ஜிபி முத்து தான்

அடுத்து எழுந்து பேசிய அமுதவாணன் எனக்கு ஜிபி முத்து தான் சார். என்கிட்ட பிரண்ட்ஷிப்பே வேண்டாம்னு நினைக்கிற அளவுக்கு அவரை வாட்டி வதைச்சிட்டு வருகிறேன் சார் என அமுதவாணன் சொல்ல, அதற்கு ஜிபி முத்து சொன்ன பதில் தான் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

பேசியே சாகடிக்கிறாங்க

பேசியே சாகடிக்கிறாங்க

அமுதவாணன் தினமும் ஜிபி முத்துவிடம் பேசுவது போல மொக்கைப் போட்டு வருவது தாங்க முடியவில்லை என்பதை கமலிட்ம் வெளிப்படையாகவே ஜிபி முத்து சொல்லிவிட்டார். ரொம்பவே பாடாய் படுத்துறாங்க.. பேசியே சாகடிக்கிறாங்க என ஜிபி முத்து வெள்ளந்தியாக பேச அரங்கம் மட்டுமல்ல புரமோவை பார்த்த ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X