GP Muthu: ஆபாசமா பேசி பாப்புலரான ஜிபி முத்து நடிகரே கிடையாது... வெளுத்து வாங்கிய வெங்கட் பிரபு

சென்னை: டிக் டாக் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

மேலும், சில திரைப்படங்களிலும் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார் ஜிபி முத்து.

இந்நிலையில், ஜிபி முத்து ஒரு நடிகரே கிடையாது என இயக்குநர் வெங்கட் பிரபு காட்டமாக விமர்சித்துள்ளார்.

 GP Muthu: Director Venkat Prabhu has severely criticized GP Muthu

ஜிபி முத்து நடிகரே கிடையாது
டிக் டாக் வீடியோக்களில் ரீல்ஸ் செய்துகொண்டிருந்த ஜிபி முத்து, கொரோனா ஊரடங்கு காலத்தில் ரொம்பவே பிரபலமானார். அவரை கலாய்த்து கடிதம் போடுபவர்களை அசலான நெல்லை வட்டார வழக்கில் கலாய்த்து வீடியோ வெளியிட்டு வந்தார். அதனால் ஜிபி முத்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும், அவரது வீடியோவையும் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதனால், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியான ஜிபி முத்து, ஆதாம் யார் என கேட்டு கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்தார். சில நாட்கள் வரை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ஜிபி முத்து, தனது மகனின் உடல்நிலை காரணமாக அவராகவே வெளியேறினார். ஆனாலும், அவருக்கான பேன்ஸ் கொஞ்சமும் குறையவே இல்லை.

அதேபோல், சில திரைப்படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜிபி முத்து நடிகரே கிடையாது என இயக்குநர் வெங்கட் பிரபு விமர்சித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் டேனியல் சின்ன ரோலில் நடித்திருந்தார். அவர் தற்போது டேனி தியேட்டர் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற வெங்கட் பிரபு, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குறித்து பேசினார். அப்போது ஜிபி முத்து ஒரு நடிகரே கிடையாது. ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பிரலமான ஜிபி முத்துவை எப்படி நடிகர் என்று சொல்லமுடியும். டிக் டாக் வீடியோவில் எப்படி பேசுகிறாரோ, அப்படித்தான் அவரால் நடிக்கவும் முடியும். ஆனால், அதனை நடிப்பு என சொல்லவே முடியாது.

மேலும் நான் இதுவரை ஜிபி முத்துவின் வீடியோக்கள் பார்த்தது இல்லையென்றும் தெரிவித்துள்ளார். தியேட்டர் ஆர்ட்டிஸ் என்பவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அழ சொன்னால், அப்படியே அழுது நடித்துவிடுவான். ஆனால், ஜிபி முத்துவால் அப்படி செய்ய முடியாது. அதனால், சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமானவர்களை நினைத்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ் பயப்பட வேண்டாம் என்றுள்ளார்.

 GP Muthu: Director Venkat Prabhu has severely criticized GP Muthu

வெங்கட் பிரபுவின் இந்த பேச்சுக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே கிடைத்துள்ளது. ஜிபி முத்து தன்னை ஒருபோதும் நடிகர் என சொல்லிக்கொண்டதே இல்லையே, பின்னர் ஏன் வெங்கட் பிரபு இப்படிக் கூற வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதேபோல், நீங்கள் படத்தில் ஐட்டம் சாங் வைத்தால் அது ஆபாசம் இல்லை, ஜிபி முத்து பேசுவது மட்டும் ஆபசமா என கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வெங்கட் பிரபுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X