வானத்த பார்த்து மல்லாக்க படுக்கும் அந்த சுகம் இருக்கே..கைப்புள்ள வடிவேலு டயலாக் சொன்ன ஜி.பி.முத்து
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 5வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஐந்தாவது நாளான இன்றும் அடுத்தடுத்து இரண்டு ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஜனனியின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு தனலட்சுமி உள்ளிட்டவர்கள் அவரிடம் சண்டைப் பிடிக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கப்பட்டு தற்போது 5வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதன் 20 போட்டியாளர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

பட்டையை கிளப்பும் ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து தொடர்ந்து அதிரடி கிளப்பி வருகிறார். இவர் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகினாலும் இவரை வைத்து செய்யவே அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவரிடம் போட்டியாளர் தனலட்சுமி 3வது நாளிலேயே சண்டை பிடித்த சம்பவமும் நடைபெற்றது.

தனலட்சுமிக்கு எதிரான மனப்போக்கு
இதையடுத்து தனலட்சுமிக்கு எதிராக ஜிபி முத்து ஆர்மி, தொடர்ந்து அடுத்தடுத்த கமெண்ட்களை பாஸ் செய்தனர். அவர் அடுத்த எலினேஷனில் போட்டியிலிருந்து வெளியேறுவார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து இன்று காலையில் வெளியான முதல் ப்ரமோவிலும் அவர் பிக்பாஸின் கமெண்ட்டையொட்டி அழுத காட்சியும் காணப்பட்டது. இதையடுத்து அவர் எலிமினேட் செய்யப்பட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜனனிக்கு வலுக்கும் எதிர்ப்பு
இதனிடையே தற்போது அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 5வது நாளையொட்டி வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், ஜிபி முத்துவிற்கு ஆதரவாக பேசிய ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பலதரப்பட்ட வயதில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் உள்ளதாகவும், ஒரே வயதிலானவர்கள் இருக்க இதுஒன்றும் ரீல்ஸ் இல்லை என்றும் முன்னதாக கூறியிருந்தார்.

அடி வாங்க வேண்டுமா?
ஜனனியின் இந்த கமெண்ட்டிற்கு நிகழ்ச்சியின் போட்டியாளர் தனலட்சுமி உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் ரீல்ஸ் என்று கூறியதற்கான காரணத்தையும் அவர்கள் கோபத்துடன் கேட்டனர். மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினர்.

கூலான ஜிபி முத்து
இதனிடையே, தன்னை வைத்துதான் இந்த வாக்குவாதங்கள் நடக்கிறது என்பது குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல், வானத்தை பார்த்து மல்லாக்க படுக்கிற சுகம் குறித்து வடிவேலு கூறியது எவ்வளவு உண்மை என்று தனது படுக்கையில் மல்லாக்க படுத்தபடி கேட்கிறார் ஜிபி முத்து.

பாட்டுப்பாடி அலப்பறை
தொடர்ந்து பொட்டு வச்ச தங்கக்குடம், ஊருக்கு நீ மகுடம் என்ற பாடலை அவர் பாடியதையும் கேட்க முடிகிறது. தொடர்ந்து தனது அலப்பறைகளை கூட்டி வருகிறார் ஜிபி முத்து. அவரை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருகின்றனர். அவருக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











