GP Muthu - அப்பாவுக்கு ஜிபி முத்து கொடுத்த பரிசு - குவியும் வாழ்த்து

சென்னை: GP Muthu (ஜிபி முத்து) பிரபல யூட்யூபரும், பிக் பாஸ் போட்டியாளருமான ஜிபி முத்து தனது தந்தைக்கு இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கி அசத்தியிருக்கிறார்.

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. சாமானிய பேச்சும், உடல்மொழியும் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் சில வாரங்களே இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பக்குவமாக இருந்ததை கண்டு மக்கள் நெகிழ்ந்துபோனார்கள்.

GP Muthu Gifted Scooter To His Father

வரவேற்பை பெற்ற செயல்: இதனால் இந்த சீசனில் வலுவான போட்டியாளராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது குடும்பத்தையும், மகனையும் பிரிந்து இருக்க முடியாது என்பதற்காக நிகழ்ச்சியின் பாதியில் அவரே வெளியேறினார். அப்படி அவர் வெளியேறினாலும் அந்த செயலையும் மக்கள் கொண்டாடினார்கள். சமீபத்தில்தான் புதிய வீடு கட்டி அதில் குடி புகுந்தார் ஜிபி முத்து.

திரைப்படங்களில் ஜிபி முத்து: இப்படி படிப்படியாக வளர்ந்துவரும் ஜிபி முத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சன்னி லியோன் மற்றும் சதீஷுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.. அதற்கான ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொண்டார். அதேபோல் அஜித் நடித்த துணிவு படத்திலும் ஒரு காட்சியிலும் தோன்றியிருந்தார். தற்போது சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

அசிங்கப்பட்டாரா ஜிபி முத்து: இதற்கிடையே நயன்தாரா நடித்திருக்கும் கனெக்ட் படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இருப்பினும் சில காரணங்களால் அதில் முத்துவால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. அந்த ஷோவுக்கு ஜிபி முத்துவும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் படத்தின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு விவாதமானது.

GP Muthu Gifted Scooter To His Father

ஃபோனில் அழைத்த விக்னேஷ் சிவன்: இதனையடுத்து ஜிபி முத்துவை நயன் தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தொலைபேசியில் அழைத்து மீண்டும் வரும்படி கூறியதாகவும், பாதி தூரம் வந்துவிட்டேன் இதனால் இன்னொரு முறை சந்திக்கலாம் என ஜிபி முத்து கூறியதாகவும் சொல்லப்பட்டது. மேலும், ப்ரீமியர் ஷோவுக்கு அழைத்துவிட்டு ஜிபி முத்துவை இப்படி நடத்தியிருக்கக்கூடாது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர்.

பரிசு வழங்கிய ஜிபி முத்து: இந்நிலையில் ஜிபி முத்து செய்திருக்கும் செயல் பாராட்டை பெற்றிருக்கிறது. தனது சம்பாத்தியத்தின் தன் தந்தைக்கு புதிய ஸ்கூட்டர் ஒன்றை அவர் வாங்கி பரிசளித்திருக்கிறார். அது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X