CWC4 :குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகும் ஜிபி முத்து.. காரணம் இதுதானா!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எலிமினேஷன்கள் நடைபெற்று வருகின்றன. வைல்ட் கார்ட் சுற்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

GP Muthu going to leave Vijay TVs Cook with comali season 4 show soon?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் ஜிபி முத்து? : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல வித்தியாசமான டாஸ்க்குகளுடன் வாரயிறுதிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் சில குக்குகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

முன்னதாக 3 சீசன்களை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த நிலையில், தற்போது 4வது சீசனும் ரசிகர்களை கவரும் வித்தியாசமான டாஸ்க்குகள் மற்றும் பொருட்களுடன் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான வகையில் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகிறது. சமையலுடன் காமெடியையும் கலந்து கொடுத்துவரும் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே, குக்குகள், கோமாளிகள் மற்றும் நடுவர்கள் என அனைத்து தரப்பினரும் காமெடி செய்து வருவதுதான். அந்த வகையில் நடுவர் வெங்கடேஷ் பட், புகழ் உள்ளிட்டவர்களை வைத்து செய்து வருகிறார். இவர் கம்பை தூக்கிக் கொண்டு, அவரை விரட்டி வருவது, வயதை மீறி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் ஐய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால் உள்ளிட்ட குக்குகள் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

GP Muthu going to leave Vijay TVs Cook with comali season 4 show soon?

தற்போது இவர்களில் கிஷோர், காளையன், விஜே விஷால், ராஜ் அய்யப்பா உள்ளிட்டவர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர். மணிமேகலையும் வெளியேறியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்துவும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜிபி முத்து தற்போது சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

இருந்தபோதிலும் தான் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ள ஜிபி முத்து, இந்த மாத இறுதியில் தன்னை சூட்டிங்கிற்கு கூப்பிட்டால் தான் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அதிகமாக ரெஸ்ட் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்ததால் ஏற்கனவே தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அந்த தப்பை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குக் வித் கோமாளி செட்டில் தாங்கள் ஜாலியாக இருந்தபோதிலும் அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உடல் சோர்வாகி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் அவர் விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X