twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிபி முத்துவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்... அதுவும் அஜித் படத்துல இப்படி ஒரு கேரக்டரா?

    |

    சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.

    துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

    ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பின்னர் தொடங்கவுள்ள நிலையில், அதில் ஜிபி முத்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நான் எடுக்க போகிற படத்தோட முன்னோட்டம் தான் லவ்டுடே.. வேற லெவல்ல இருக்கும்..மிரள் இயக்குநர் கலக்கல்!நான் எடுக்க போகிற படத்தோட முன்னோட்டம் தான் லவ்டுடே.. வேற லெவல்ல இருக்கும்..மிரள் இயக்குநர் கலக்கல்!

    அஜித்தின் ஏகே 62

    அஜித்தின் ஏகே 62

    அஜித் நடித்துள்ள துணிவு பொங்கல் ரேஸில் களமிறங்க ரெடியாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து 'ஏகே 62' படத்தில் நடிக்க அஜித் தயாராகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். ஏகே 62 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், ஏகே 62 படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    அஜித்துடன் ஜிபி முத்து?

    அஜித்துடன் ஜிபி முத்து?

    விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் இதில் விவசாயியாக நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ள ஜிபி முட்து அஜித்துடனும் இணைந்து நடிக்கவுள்ளதது அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விரைவில் அறிவிப்பு

    விரைவில் அறிவிப்பு

    ஏகே 62 படத்தில் நடிக்கும் ஜிபி முத்துவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது முழுமையான காமெடி கேரக்டரில் ஜிபி முத்துவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால், அஜித் - ஜிபி முத்து காம்போவில் காமெடி அதகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியே ஜிபி முத்துவுக்கு ஏகே 62 பட வாய்ப்பு மட்டும் இல்லாமல் மேலும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.

    இதுவும் சூப்பர் தான்

    இதுவும் சூப்பர் தான்

    ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், நெல்லை வட்டார வழக்கில் பேசி அசத்தி வரும் ஜிபி முத்து, ஏகே 62 படத்தில் சரியாக செட்டாகிவிடுவார் என எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தில் அஜித் போன்ற முன்னணி நடிகருடன் ஜிபி முத்து நடிக்கவிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஏகே 62 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.

    English summary
    Ajith is currently acting in Thunivu. After that, Ajith will act in AK 62 film directed by Vignesh Shivan. It has been reported that GP Muthu will play an important role in this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X