நனவான ஜிபி முத்து கனவு.. ரச்சிதா -ஜனனியுடன் டான்ஸ் டாஸ்கில் ஆட்டம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டான்ஸ் டாஸ்க் தொடர்ந்து களைகட்டி வருகிறது.
இந்த டாஸ்க் மூலம் வெறுமனே மூலையில் சுற்றிக் கொண்டிருந்த போட்டியாளர்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.
இதில் ரச்சிதா மற்றும் ஜனனி இருவரும் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் வாரத்தில் வேறு மாதிரியான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் போட்டியாளர்கள் அதிரடி கிளப்பி வருகின்றனர். தலைவருக்கான டாஸ்க், டான்ஸ் டாஸ்க்என அடுத்தடுத்து களைகட்டி வருகிறது.

தொடர்ந்து என்கேஜ்
ரசிகர்களை தொடர்ந்து என்கேஜ் செய்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன். முதல் வாரத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவருக்காக ஆர்மிக்களை உருவாக்க வைத்தார் ஜிபி முத்து. தனலட்சுமி, ஜனனி உள்ளிட்டவர்களும் கடந்த வாரத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் டாஸ்க்
இதனிடையே தற்போது டான்ஸ் டாஸ்க் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் ஜிபி முத்து, தனலட்சுமி, விக்ரமன் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்தனர். ஜிபி முத்து, விக்ரமன் ஆகியோர் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுவார்களா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.

ரச்சிதா -ஜனனியுடன் ஆட்டம்
தனலட்சுமியும் அதிரடி சரவெடியாக தனுஷ் படத்தின் இசைக்கு நடனமாடி அசத்தினார். இதனிடையே ரச்சிதாவும் ஜனனியும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து டூ டூ பாடலுக்கு ஆடிய ஆட்டம் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இந்தப் பாடலின் இடையில் ஜிபி முத்துவை மேடைக்கு இழுத்து வந்து ஆடவைத்ததும் சிறப்பாக அமைந்தது.

நனவான ஜிபி முத்துவின் கனவு
கடந்த வாரத்தில் கமல்ஹாசனிடம் பேசிய ஜிபி முத்து தான் திரையில் சிம்ரன் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார். இதேபோல பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா மற்றும் ஜனனியையே அவர் தனது நாயகிகளாக குறிப்பிட்டார். இதனிடையே அவர் ஆசைப்பட்டவர்களுடனே அவர் ஆடியுள்ளார். இதன்மூலம் அவரது ஆசை நிறைவேறியுள்ளது.
இதனிடையே ஒரிஜினல் டூ டூ பாடலில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஜிபி முத்துவின் முகத்தை வைத்து நயன்தாரா, சமந்தாவிற்கு பதிலாக ஜனனியையும் ரச்சிதாவின் முகங்களை இணைத்து ரசிகர்கள் வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மொத்தத்தில் ரச்சிதா மற்றும் ஜனனியுடன் ஜோடி சேரும் ஜிபி முத்துவின் ஆசை இதன்மூலம் நிஜமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











