சன்னி லியோனை தொடர்ந்து ஷிவானி நாராயணன் படத்தில் இணைந்த ஜிபி முத்து.. வேறலெவல் யோகம் தான் போல!

சென்னை: டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து தொடர்ந்து தமிழ் சினிமா படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஆபாச ஜோக்குகளை அடித்து ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானவர் ஜிபி முத்து. அவரது வித்தியாசமான ஸ்லேங்கால் கவரப்பட்டு ஏகப்பட்ட பேர் அவருக்கு ரசிகர்களாக மாறி உள்ளனர்.

சன்னி லியோன் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து அடுத்ததாக பிக் பாஸ் ஷிவானி நாராயணன் படத்தில் காமெடியனாக இணைந்துள்ளார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

டிக் டாக் செயலி மூலம் ஜிபி முத்து போல ஏகப்பட்ட சாமானியர்கள் செலிபிரிட்டிகளாக மாறினர். இந்தியாவில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பலரது வருமானம் தடைபட்டது. டிக் டாக் பிரபலங்கள் சிலர் யூடியூப் பிரபலங்களாகவும், சிலர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளனர். ஜிபி முத்து தற்போது தமிழ் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸுக்கு போகல

பிக் பாஸுக்கு போகல

பிக் பாஸ் சீசன் 5ல் ஜிபி முத்து கலந்து கொள்ளப் போகிறார் என பரவலாக தகவல்கள் வெளியாகின. ஜிபி முத்துவும் பிக் பாஸ் வீட்டுக்கு முன்பாக இருக்கும் போட்டோ ஒன்றும் வெளியாகி நிச்சயம் அவர் சீசன் 5ல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் செல்லவில்லை என்பதை அவர் இறுதியாக தெளிவுப்படுத்தினார்.

சன்னி லியோன் படத்தில்

சன்னி லியோன் படத்தில்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் நடித்து வரும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடிகர் ஜிபி முத்து காமெடியனாக நடித்துள்ளார். குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் அந்த பேய் படத்தில் நடித்துள்ளனர். சீக்கிரமே அந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Recommended Video

அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!
ஷிவானி நாராயணன் படத்தில்

ஷிவானி நாராயணன் படத்தில்

சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து வரும் பம்பர் படத்தில் காமெடியனாக இணைந்துள்ளார்.

பம்பர் ஹீரோவுடன் ஜிபி முத்து

பம்பர் ஹீரோவுடன் ஜிபி முத்து

சமீபத்தில், பம்பர் படத்தின் ஹீரோ வெற்றி உடன் நடிகர் ஜிபி முத்து பைக்கில் அவர் பின்னாடி அமர்ந்தபடி வெளியான லேட்டஸ்ட் ஸ்டில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. கூடிய சீக்கிரமே பம்பர் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபி முத்துவும் தொடர்ந்து மேலும், சில தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

துப்பாக்கி பாண்டியன்

துப்பாக்கி பாண்டியன்

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் பம்பர் படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜிபி முத்து. கேரளா லாட்டரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக இந்த பம்பர் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X