தீபாவளி சர்ப்பிரைஸ்.. ஜிபி முத்துவை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்களா குடும்பத்தினர்?

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கிய மற்றும் முதல் போட்டியாளராக ஜிபி முத்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளிலிருந்தே அவரது சிறப்பான செயல்பாடுகள் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

இதனிடையே தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து தன்னுடைய ஏக்கத்தை ஜிபி முத்து வெளிப்படுத்தி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 6ன் முக்கியமான மற்றும் முதல் போட்டியாளராக ஜிபி முத்து உள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்து இவரது செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ரசிகர்களை மட்டுமில்லாமல் சக போட்டியாளர்களையும் இவர் கவர்ந்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றவும் உதவி வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து

ஜிபி முத்துவின் வெள்ளந்தியான பேச்சுக்கள் மற்றம் நடவடிக்கைகளால் கவரப்பட்ட ரசிகர்கள், அவருக்காக ஆர்மியை துவங்கியதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்ட தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் கடிகாரத்தில் தொங்கி வெற்றி பெற்று நிகழ்ச்சியின் முதல் தலைவரானார்.

பாதாம் தெரியும்.. ஆதாம் யாரு?

பாதாம் தெரியும்.. ஆதாம் யாரு?

கடந்த வார இறுதியில் கமலில் இவர் பேசிய நிலையில், ஆதாம் யாரு என்று கேட்டு அவரையே திணறடித்தார். பாதாம் தெரியுது, ஆதாம் தெரியவில்லையா என்று கமல் கேட்குமளவிற்கு நகைச்சுவையான உரையாடல்களை பார்த்த ரசிகர்கள் என்ஜாய் செய்தனர். தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் டான்ஸ் டாஸ்க்கில் செம குத்து குத்தினார்.

நிகழ்ச்சியில் வெளியேற விருப்பம்

நிகழ்ச்சியில் வெளியேற விருப்பம்

நிகழ்ச்சியின் தலைவராகவும் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். கோபப்படும் வேளைகளில் அதையும்கூட சாப்ட்டாக செய்து அசத்தி வருகிறார். நிகழ்ச்சியின் பிரதானமான போட்டியாளராக இவர் இருந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாக இவர் கூறி வருகிறார்.

கதறி அழுத ஜிபி முத்து

கதறி அழுத ஜிபி முத்து

தன்னுடைய குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பார்க்காமல் தனக்கு மூச்சு முட்டுவதாகவும் தன்னால் சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை என்றும் இவர் கதறி அழுதார். பிக்பாசிடமும் இதைக் கூறி முறையிட்டார். அவர் நன்றாக விளையாடி வருவதாவும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் அவரது குறையை கூறி ஆறுதல் அடையுமாறும் பிக்பாஸ் கூறியதையும் ஜிபி முத்து ஏற்கவில்லை.

 ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ்

ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ்

தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர் ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ் தரவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் சந்திப்பு?

குடும்பத்தினருடன் சந்திப்பு?

இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவக்கம் முதலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதற்கு ஜிபி முத்து முக்கியமான காரணமாக உள்ளார். அவர் நிகழ்ச்சியின் இடையில் வெளியேறுவதை விஜய் டிவி விரும்பவில்லை. இதையடுத்தே அவர், அவரது குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜிபி முத்துவின் ஏக்கம்

ஜிபி முத்துவின் ஏக்கம்

தன்னுடைய மனதில் குடும்பத்தினர் குறித்த ஏக்கம் இருந்தாலும் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் ஜிபி முத்து. இதனிடையே, அவரது குடும்பத்தினரை பார்த்துவிட்டால், அவரது உற்சாகம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனது குழந்தைகளை பார்க்கவே அவர் அதிகமான ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X