அட கொள்ளைல போறவனுங்களா.. ஏம்லே இப்படி பண்ணுதீக.. விஜய் ரசிகர்களை விளாசிய ஜிபி முத்து
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். கரூர் துயர சம்பவம் அவரது இமேஜை டோட்டலாகவே டேமேஜ் ஆக்கியிருக்கிறது. அந்த டேமேஜை சரி செய்யும் வாய்ப்பு அவர் நேரில் சென்று ஆறுதல் சொல்வதில்தான் இருந்தது. ஆனால் அதையும் கோட்டைவிட்டுவிட்டார் என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்நிலையில் ஜிபி முத்து வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவத்துக்கு விஜய்யின் அலட்சியம், தாமதமான வருகை, தவெகவினர் செய்த ஏனோதானோவென்ற ஏற்பாடுதான் காரணம் என பலரும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள்.
நேரில் செல்லாத விஜய்: மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு விஜய் நேரில் செல்லாததும் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. கரூருக்கு செல்ல அனுமதி கேட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போதோ பாதிக்கப்பட்டவர்களை மகாபலிபுரத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் சொல்லும் ஏற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. தவெகவின் இந்த செயல்பாடு இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அப்படி?: துக்கம் நடந்த வீட்டுக்கு நேரில் சென்றுதான் ஆறுதல் சொல்ல வேண்டுமே தவிர; நிதியுதவி, பொருள் உதவி அளிப்பது போல் நேரில் வரவழைத்து சொல்வது மனித மாண்பே இல்லை; இப்படிப்பட்ட ஐடியாவை எல்லாம் விஜய்க்கு யார்தான் கொடுக்கிறார்கள்; இப்போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன செய்வாரோ என்று ஏகப்பட்ட அம்புகள் அவர் மீது பாய தொடங்கியிருக்கின்றன.
செட்டப் செய்யப்பட்ட ரசிகர்கள்: இதற்கிடையே கரூரில் பாதிக்கப்பட்ட சிலர் சில நாட்களுக்கு முன்பு பேட்டிகள் கொடுத்தார்கள். அந்தப் பேட்டிகளில், 'எங்களுக்கு விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை. அவரை நேரில் பார்த்ததே போதும். அவர் ஆட்சிக்கு வந்து எங்களை கண்டிப்பாக காப்பாற்றுவார்' என்று பேசியிருந்தார்கள். அதனை பார்க்கும்போது, தவெகவினர் செட் செய்தவர்கள் போன்று இருப்பதாக சந்தேகங்களும் கிளம்பின.
ஜிபி முத்து வீடியோ: இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கும் ஜிபி முத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "நான் ஒரு வீடியோ பார்த்தேன். அந்த வீடியோவில் பேசிய பெண், எனக்கு எனது கணவரைவிடவும் தளபதி விஜய்யைத்தான் பிடிக்கும் என சொன்னார். ஆனால் அந்தப் பெண் இறந்துவிட்டார். அப்போது யார் வந்து அழுதது அந்தக் கணவர்தான். அதேபோல், என் கையை வெட்டினால் ரத்தம் வராது தளபதி தளபதி என்றுதான் வரும் என இன்னொருவர் சொல்கிறார். அவருக்கு ரத்தம் ஏற்றும்போது டியூபை சொருவி தளபதி தளபதி என்று சொன்னால் ரத்தமும் ஏறும் உயிரும் வந்துவிடுமோ.
ஏம்லே இப்படி பண்ணுதீக: அட கொள்ளைல போறவனுகளா இப்படி கிறுக்கு புடிச்சு அலையுறுங்கிளே. இதையெல்லாம் விஜய் பார்ர்த்தால் அவரே தலையை பிய்த்துக்கொண்டு அலையப்போகிறார். ஏம்லே இப்படி பண்ணுதீக. இதையெல்லாம் நான் சொன்னால் பொல்லாதவன். நானும், எனது மனைவியும் விஜய் ரசிகர்கள்தான். இவர்கள் பேசுவதெல்லாம் முட்டாள்த்தனமானது. அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











