Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாரா கூட படம் பார்க்கலாம்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திட்டாங்க.. வருத்தப்பட்ட ஜிபி முத்து!
சென்னை : நயன்தாரா கூட படம் பார்க்கலாம்னு கூப்புட்டு அசிங்கப்படுத்திட்டாங்க என்று டிக் டாக் புகழ் ஜிபி முத்து செய்தியாளர்களிடம் தனது வேதனையை பகிர்ந்து உள்ளார்.
மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.
இப்படத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா தயாரித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
“பில்லா“
படத்தில்
கவர்ச்சியாக
நடிக்க
அதுதான்
காரணம்..உண்மையை
சொன்ன
நயன்தாரா!

கனெக்ட்
கனெக்ட் திரைப்படத்தின் பிரிவியூ காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் வந்திருந்தார். அந்த பிரிவியூ ஷோவில் கலந்து கொள்ளுமாறு ஜிபி முத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், ஜிபி முத்து இதில் கலந்து கொண்டார். ஆனால் அவர் படம் பார்க்காமலே வெளியேறினார்.

நயன்தாரா கூட படம் பார்க்கலாம்
இதுகுறித்து ஜிபி முத்துவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த ஜிபி முத்து, கனெக்ட் படத்தின் பிரிவியூ நிகழ்ச்சியை நடத்தியவர்கள், என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு இருந்தவர்கள் என்னை நடத்திய விதம் வேற என்றார். அதாவது, நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு தான் கூப்பிட்டாங்க.

அசிங்கப்படுத்தினார்கள்
ஆனால், அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க, அது மட்டுமில்லாமல் தரக்குறைவாக நயன்தாரா பவுண்டர்கள் பேசினார்கள். இதனால், படம் பார்க்காமல் வெளியில் வந்து விட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. அதன்பின் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார். நான் பாதி தூரம் வந்துட்டேன், மீண்டும் சந்திக்கலாம்னு சொல்லிட்டேன் என மனவருத்தத்துடன் பேசினார் ஜிபி முத்து.

மக்களின் மனதை கவர்ந்தார்
டிக் டாஸ் புகழ் ஜிபி முத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வீட்டில் இவர் இருந்தது வெறும் 14 நாட்கள் மட்டும்தான் என்றாலும், டைட்டிலை வெல்ல ரசிகர்களின் ஆதரவு இருந்த போதும், பணம், புகழைவிட என் மகன் தான் முக்கியம் என்று இவர் வீட்டைவிட்டு வெளியேறியதால், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.