நான் பன்னியா.. பன்னி கடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? ப்ளூ சட்டையை விளாசிய ஜிபி முத்து!

சென்னை: வெற்றி, ஷிவானி நாராயணன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பம்பர் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். தன்னை பன்னி என ப்ளூ சட்டை மாறன் பேசியதாக ஜிபி முத்து பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான ஜிபி முத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

GP Muthu slams Blue Sattai Maran for Pig comment in Bumper review

ஒரே வாரத்தில் அந்த வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன் பம்பர் விமர்சனம்: பிக் பாஸ் ஷிவானி மற்றும் 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றி, ஹரிஷ் பெரடி நடிப்பில் வெளியான பம்பர் திரைப்படம் பார்க்க நல்லா இருக்கு என்றும் திரைக்கதையில் எந்தவொரு சொதப்பல் இல்லை என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன.

ப்ளூ சட்டை மாறனும் இந்த படத்தை வழக்கத்துக்கு மாறாக பாராட்டி இருந்தார். ஆனால், கடைசியில் பன்னி ஒன்றை உள்ளே விட்டு படத்தைக் கெடுத்துட்டாங்க, அந்த பன்னி யாரென கண்டுபிடித்து அங்கேயே அடித்துக் கொன்றிருந்தால் படம் நல்லா இருந்திருக்கும் என்றார்.

பன்றி என விமர்சனம்: இப்போதான் மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் பன்றியை வைத்தே மொத்த படத்தையும் அழகாக எடுத்திருந்தனர். இந்நிலையில், பன்றி என ஜிபி முத்துவை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார் என கிளம்பிய சர்ச்சை பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளது.

ஏற்கனவே நடிகர்களையும் இயக்குநர்களையும், ஹீரோயின்களையும் படுமோசமாக கலாய்த்து பிரச்சனையில் சிக்கி வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது ஜிபி முத்துவை இப்படி பேசி உள்ளார் என ஜிபி முத்துவே வீடியோ போட்டு ப்ளூ சட்டை மாறனை திட்டி உள்ளார்.

GP Muthu slams Blue Sattai Maran for Pig comment in Bumper review

பன்னி கடிச்சா என்ன ஆகும் தெரியுமா?: ப்ளூ சட்டை மாறன் பம்பர் படத்திற்கு நல்லாத்தான் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இடையே ஒரு பன்னி வருதுன்னு சொல்றாரு, அவரு என்ன தான் பன்னின்னு சொல்றாரு.. ஏய் நான் பன்னியா? பன்னி கடிச்சா என்ன ஆகும் தெரியுமா? தேவையில்லாமல் என்னை சீண்டிட்ட.. உன்னை சும்மா விடமாட்டேன் என வீடியோ வெளியிட்டு ப்ளூ சட்டை மாறனை விளாசி உள்ளார் ஜிபி முத்து.

ஜிபி முத்து ரசிகர்கள் கமெண்ட்டில் அவரை சமாதானம் செய்து வருகின்றனர். மேலும், ப்ளூ சட்டை மாறனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X