ஜி.பி முத்துவுக்கு உடல் நலக்குறைவு...வீட்டை விட்டு வெளியேறுகிறாரா?
சென்னை : ஜி.பிமுத்து கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முந்தைய 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

ஜிபிமுத்து ஆர்மி
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இவர், ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்து இருப்பதால், இவர் வீட்டிற்குள் வந்ததுமே, இவரது ரசிகர்கள் ஜிபிமுத்து ஆர்மி தொடங்கி அவரின் வீடியோக்களை டிரெண்டாக்கி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

வெளியேற்றுங்கள் பிக் பாஸ்
வெளியில் ஜிபிமுத்துக்கு இவ்வளவு ஆதரவு இருக்க, தனலட்சுமியோ நீ வா.. போனு பேசாதீங்க என்று சொல்லி ஜிபி முத்துவை அழவைத்துவிட்டார். தலைவன் அழுததைப்பார்த்து கொந்தளித்துப்போன ஜிபி முத்துவின் ரசிகர்கள், இந்த தனலட்சுமியை பார்க்கவே கடுப்பாக வருது. பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை முதல் ஆளாக அவரை வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என ட்விட்டரில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

திடீரென காய்ச்சல்
இந்நிலையில்,நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் சிரித்து பேசி வந்த ஜிபி முத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், ஷோபாவில் படுத்து இருக்கிறார். இவருக்கு ரச்சிதா மாத்திரை கொடுத்து இங்கேயே தூங்குங்க ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க என்று கூறுகிறார். தற்பொழுது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் சக போட்டியாளர்களுக்கும் காய்ச்சல் பரவக்கூடும் என்பதால் இவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Click it and Unblock the Notifications











