பொண்டாட்டி அதை சொன்னா பத்து தரம் சுத்தி வருவேன்.. ஜிபி முத்து பரவசம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக மட்டுமில்லாமல் முதல் கேப்டனாகவும் மாறியுள்ளார் ஜிபி முத்து.
நேற்றைய தினம் கிளாக்கில் தொங்கியபடி ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் இருந்து கேப்டனாக மாறியுள்ளார்.
இதையடுத்து அமுதவாணன் உள்ளிட்டவர்கள் ஜிபி முத்துவை தலைவர், தலைவர் என்று கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் வாரத்தில் பரபரபப்பான பல டாஸ்க்குகளுடன் நிறைவடைந்து இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் துவக்கத்திலிருந்தே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஜிபி முத்து காணப்படுகிறார்.

போட்டியில் சுவாரஸ்யம்
தன்னுடைய வெள்ளந்தித்தனமான செய்கைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ஜிபி முத்து. அவருக்கு ரசிகர்கள் ஆர்மி துவங்கும் அளவிற்கு அவர் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்கு ஜிபி முத்து முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

அழ வைத்த தனலட்சுமி
அவருடன் தனலட்சுமி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் சண்டை பிடித்து அவரை அழவைத்த நிலையில், அவருடைய ஆர்மியில் இருந்து அதிகமான சப்போர்ட் கிடைத்தது. மேலும் அவரது அழுகைக்கு காரணமான தனலட்சுமிக்கு எதிர்ப்பும் கிளம்பியது. தொடர்ந்து ரசிகர்களின் பேவரிட்டாக இருந்து வருகிறார் ஜிபி முத்து.

கேப்டனுக்கான டாஸ்க்
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி புதிய டாஸ்க்காக நிகழ்ச்சியின் முதல் கேப்டனுக்கான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. கிளாக்கில் யார் அதிக நேரம் தொங்கியபடி நிற்கிறார்களோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்று கூறப்பட்டது.

கேப்டனான ஜிபி முத்து
இதையடுத்து சாந்தி, ஜனனியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினார் ஜிபி முத்து. தொடர்ந்து அந்த கிளாக்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் தொங்கி நிகழ்ச்சியின் முதல் கேப்டனாகியுள்ளார். இதையடுத்து அனைத்து போட்டியாளர்களிடமும் அவர் சகஜமாக நட்புடன் பழகி வருகிறார்.

ஐ லவ் யூ சொல்லாத ஜிபி முத்து
நேற்றைய தினம் இவ்வாறு அவர் சக போட்டியாளர்களிடம் பேசியபொழுது அவர் தன்னுடைய மனைவியிடம் இதுவரை ஐ லவ் யூ சொல்லியிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு அதுகுறித்தெல்லாம் தெரியாது என்றும் இனிமேல் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பத்து தரம் சுற்றி வருவேன்
இதேபோல தன்னுடைய மனைவியும் தன்னிடம் ஐ லவ் யூ என்று கூறியதில்லை என்றும் மாமா என்றுக் கூட சொல்ல வெட்கப்படுவாள் என்றும் ஜிபி முத்து தெரிவித்துள்ளார். அப்படி தன்னுடைய மனைவி ஐ லவ் யூ என்று சொன்னால் பத்து தரம் சுற்றி வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தை மிஸ் செய்யும் ஜிபி முத்து
விரைவில் இந்த சம்பவத்தை நடத்துகிறோம் என்று மைனா உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர். இதே போல தன்னுடைய குடும்பத்தை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு மெசேஜ்களை அவர் கூறிவருகிறார். அவை அனைத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications











