GP Muthu: திடீரென மருத்துவமனையில் அட்மிட்டான ஜிபி முத்து... என்ன இப்படி படுத்த படுக்கையாகிட்டாரு?
சென்னை: டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, பிக் பாஸ், குக் வித் கோமாளி என தற்போது விஜய் டிவியின் பிராப்பர்ட்டி ஆகிவிட்டார்.
மேலும், சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் ஜிபி முத்து.
இந்நிலையில், குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.
ஜிபி முத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் அட்மிட்டான ஜிபி முத்து: "எலே செத்தப் பயலே... நாரப் பயலே" என நெல்லை வட்டார வழக்கில் பேசி, டிக் டாக்கில் பிரபலமானவர் ஜிபி முத்து. கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கிய பலருக்கும் ஜிபி முத்து தான் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தார். அந்தளவிற்கு தொடர்ந்து காமெடி வீடியோக்களை வெளியிட்டு பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6ல், முதல் போட்டியாளராக வீட்டுக்குள் அடியெடுத்து அட்ராசிட்டி செய்தார். ஆதம் யார் என அவருக்கும் கமலுக்கும் நடந்த உரையாடல்கள் இப்போதும் மீம் கண்டெண்ட்டாக வலம் வருகிறது. ஆனால், சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு மீண்டும் ட்ரெண்டிங் ஆனார்.
தற்போது விஜய் டிவியின் பிரப்பார்ட்டியாக மாறிவிட்ட ஜிபி முத்து, குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ள ஜிபி முத்துவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படுத்த படுக்கையாக பெட்டில் இருக்கும் ஜிபி முத்துவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு என்ன ஆனது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

மருத்துவமனையில் அட்மிட்டான போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள ஜிபி முத்து, வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால், ஜிபி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் எதுவும் தெரியவில்லை. இன்னொரு பக்கம் ஜிபி முத்து சிகிச்சை எடுத்துவரும் போட்டோவை நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதில், ஜிபி முத்துவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக கமெண்ட்ஸ் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். அதேபோல், ஜிபி முத்து வழக்கமாக பேசும் நெல்லை வட்டார வார்த்தைகளை பயன்படுத்தி அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் பாதி ஜிபி முத்து பேசுவதை போல டபுள் மீனிங் கமெண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில் ஜிபி முத்துவின் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











